மகேஷ் பாபு, ராஜமெளலி இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்: இன்னொரு ஸ்பெஷல் ட்ரீட்டும் இருக்கு

ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் நடிப்பில் இறுதியாக சர்காரு வாரி பாட்டா திரைப்படம் வெளியாகியிருந்தது.

தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் தனது 28வது படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு, அடுத்து ராஜமெளலியுடன் இணைகிறார்.

மகேஷ் பாபு - ராஜமெளலி இணையும் படத்தின் ஷூட்டிங் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் மகேஷ் பாபு

ஸ்மார்ட் மகேஷ் பாபு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள மகேஷ் பாபு, 1999ல் வெளியான 'ராஜகுமாருடு' படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து 'யுவராஜு', 'வம்சி', 'போபி', 'ஒக்கடு', 'போக்கிரி' 'கலேஜா' என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். ஹீரோவாக இதுவரை 27 படங்களில் மட்டுமே நடித்துள்ள மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இறுதியாக மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

த்ரி விக்ரம் படத்தில் பிஸி

த்ரி விக்ரம் படத்தில் பிஸி

தமிழில் விஜய்யின் ரூட்டை அப்படியே தெலுங்கில் மகேஷ் பாபு ஃபாலோ அப் செய்து வருவதாக ரசிகர்களால் சொல்லப்படுவது உண்டு. மகேஷ் பாபுவின் படங்களை தமிழில் விஜய்யும், விஜய்யின் படங்களை தெலுங்கில் மகேஷ் பாபுவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகேஷ் பாபு தனது 28வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவரது ஆஸ்தான இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கி வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

ராஜமெளலியுடன் இணையும் மகேஷ் பாபு

ராஜமெளலியுடன் இணையும் மகேஷ் பாபு

மகேஷ் பாபு - த்ரிவிக்ரம் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதால், கண்டிப்பாக இந்தப் படம் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதன்முறையாக ராஜமெளியின் படத்தில் நடிக்கவுள்ளார் மகேஷ் பாபு. இதுகுறித்து பேசியிருந்த மகேஷ் பாபு, ராஜமெளலி இயக்கத்தில் நடிப்பது, ஒரேநேரத்தில் 25 படங்களில் நடிப்பதற்கு சமம் எனத் தெரிவித்திருந்தார். அதனால், மகேஷ் பாபு - ராஜமெளலி இணையும் படம் மீதும் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செப்டம்பரில் ஷூட்டிங்

செப்டம்பரில் ஷூட்டிங்

ராஜமெளலி - மகேஷ்பாபு கூட்டணி வைத்துள்ள படத்திற்கு தற்காலிகமாக 'SSMB29' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என பிரம்மாண்டமான படங்களை கொடுத்த ரஜமெளலி, மகேஷ் பாபுவின் படத்தை இன்னும் மெகா பட்ஜெட்டில் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் 8ம் தேதி பூஜையுடன் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு செப்டம்பர் 13ம் தேதி முதல் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X