விஜய்யுடன் இணைந்து நடிக்க ரெடி.. இணையும் சூப்பர் கூட்டணி
Recommended Video
சென்னை: தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விஜய்யுடன் இணைந்து நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பின் ஆந்திரா சென்று அங்கு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு. இவர் அப்பா கிருஷ்ணா அவரும் ஒரு பழம்பெரும் நடிகர். இவர் சென்னையில் தான் கல்லூரி படிப்பை முடித்த கையோடு விசாகப்பட்டினம் சென்று தனது நடிப்புக்கான பயிற்சியை இயக்குனர் சத்யனந்த் இடம் கற்றார்.

நீடா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஒரு நடிகராக ராஜ குமாரடு என்ற படத்தில் பிரித்தி ஜிந்தா உடன் இணைந்து நடித்தார் மகேஷ் பாபு. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் மகேஷ் பாபு.
இவருக்கு ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது ஒக்கடு. இப்படம் ஆந்திரா மட்டுமல்லாது சென்னையில் கூட பல வசூல் சாதனை புரிந்தது. பின் போக்கிரி என்ற படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வர தொடங்கினார். இவரால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பயன் அடைந்துள்ளனர்.

இவரை போலவே தமிழில் நம் இளைய தளபதி விஜய் இவர் நடித்த ஒக்கடு மற்றும் போக்கிரி போன்ற படங்களை இங்கு ரீமேக் செய்து நடித்து தன் மார்க்கெட்டை பிடித்தார் விஜய்.
இயக்குனர் முருகதாஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய ஸ்பைடர் படக்குழு அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.


தற்போது அதற்கு பதில் அளித்துள்ளார் மகேஷ் பாபு. விஜய்யுடன் இணைந்து நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளார். இனி இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ள மகேஷ் பாபு. விஜய்யும் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க முன்பே ஒகே சொல்லிட்டார் என்று முதலிலேயே கூறப்பட்டது. ஆக இருவரும் இணையும் நடிக்கும் புது படம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று பலரால் மற்றும் அவர்களின் ரசிகர்களால் நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











