மெசேஜ் படமா.. வேண்டவே வேண்டாம்.. ஒதுங்கும் பிரபல ஹீரோ.. என்ன காரணம் தெரியுமா?

ஹைதராபாத்: டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, மெசேஜ் சொல்லும் கதைகளுடன் வரும் இயக்குநர்களுக்கு நோ சொல்லி வருகிறாராம்.

Recommended Video

விஜயுடன் படம் நடிக்க ரெடி... உருவாகிறதா மகேஷ் பாபு, விஜய் காம்போ?

அனில் ரவிப்புடி இயக்கத்தில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மகேஷ் பாபு, ராஷ்மிகா நடிப்பில் வெளியான சரிலேரு நீக்கெவரு படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்து, தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அடுத்ததாக ஜாலியாக ஒரு மாஸ் என்டர்டெயினர் படத்தில் நடிக்க மகேஷ் பாபு முடிவு செய்துள்ளாராம்.

மெசேஜ் படம்

மெசேஜ் படம்

கடந்த 2015ம் ஆண்டு மகேஷ் பாபு, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ஸ்ரீமந்துடு படத்தை தொடர்ந்து, வரிசையாக பரத் அனி நேனு, மகரிஷி மற்றும் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் சரிலேரு நீக்கெவரு படம் வரை ஒரே ஸ்ட்ராங் மெசேஜ் சொல்லும் படமாகவே நடித்து வந்துள்ளார்.

போர் அடிச்சுடுச்சு

போர் அடிச்சுடுச்சு

தொடர்ந்து, மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அறிவுரை சொல்லும் விதமாகவும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடுவது போன்று பல படங்களில் நடித்து மகேஷ் பாபுவுக்கு போர் அடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மகேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், நிச்சயம் கமர்ஷியல் என்டர்டெயினர் கதையை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரிஜெக்ட் பண்ணிட்டாரு

ரிஜெக்ட் பண்ணிட்டாரு

இயக்குநர் வம்சி பைதிபலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மகேஷ் பாபுவின் மகரிஷி திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில், மகேஷ் பாபுவிற்காக செம ஸ்ட்ராங்கான மெசேஜுடன் ஒரு புதிய கதையை உருவாக்கி வம்சி கூறியுள்ளார். ஆனால், அடுத்த படம் மெசேஜ் படமாக வேண்டாம் என முடிவெடுத்துள்ள மகேஷ் பாபு அந்த கதையை ரிஜெக்ட் செய்துள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

டோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு, பல கருத்துள்ள படங்களிலும், மக்களை காப்பாற்றும் வேடத்திலும் நடித்துள்ளார். அந்த படங்கள் நன்றாகவே ஓடி வரும் நிலையில், ஏன் இந்த திடீர் முடிவு என்ற கேள்வி தெலுங்கு திரையுலகில் பேசு பொருளாக அடிபட்டு வருகிறது.

அலா வைகுந்தபுரமுலோ

அலா வைகுந்தபுரமுலோ

ஜனவரி 11ம் தேதி வெளியான மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவரு படத்திற்கு போட்டியாக அல்லு அர்ஜுனின் அலா வைகுந்த புரமுலோ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது தான் இதற்கான காரணம் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அலா வைகுந்த புரமுலோ படம் ஃபேமிலி என்டர்டெயினராக வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி படத்தில்

சிரஞ்சீவி படத்தில்

மகேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், சிரஞ்சீவியின் 152வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரட்டல சிவா இயக்கத்தில் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்து வரும் சிரஞ்சீவி படத்தின் தலைப்பு ஆச்சார்யா என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X