வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு
சென்னை: முன்னணி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகும் மீக்கு மாத்ரமே செப்தா படத்தின் ட்ரைலரை, மற்றொரு முன்னணி நடிகரான மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார். இதற்கு விஜய் தேவரகொண்டா தனது நன்றியை தெரிவித்துள்ளார். இப்படத்தில் சின்னத்திரை நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் நாடகங்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் வாணி போஜன் டிவி சீரியல்களில் நடிப்பதையும் முழுவதுமாக நிறுத்தி விட்டார்.

அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினராக வந்து சென்ற வானி போஜன் தற்போது மீக்கு மாத்ரமே செப்தா எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் பெல்லீ சூப்லு பட இயக்குனர் தருன் பாஸ்கர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை தயாரித்து வருகிறார் அர்ஜீன் ரெட்டி ஹீரோவான விஜய் தேவரகொன்டா' .இந்த படத்தை இயக்கி வருகிறார் சமீர் சல்தான். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.
அதற்கு பிறகு இன்று படத்தின் டிரைலர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவால் ரிலீஸ் செய்யபட்டிருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்த மகேஷ்பாபு படக்குழுவினருக்கும் அறிமுக
தயாரிப்பாளரான விஜய் தேவரகொண்டாவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தேவரகொண்டா நன்றி சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.
வாணி போஜன் இந்த படத்திற்கு பிறகு ஓ மை கடவுளே படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில், தெகிடி நாயகன் அசோக் செல்வனுடன் நடித்து வருகிறார். அசோக் செல்வன் கடைசியாக ப்ரியதர்சன் இயக்கத்தில் சில சமயங்களில் படத்தில் நடித்திருந்தார்.
அதற்கு பிறகு செனோரிட்டா, நெஞ்சமெல்லாம் காதல், ரெட் ரம் மற்றும் பிக்பாஸ் ஜனனியுடன் வேழம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு ஓ மை கடவுளே படத்திலும்
ஒப்பந்தமாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











