கர்நாடகாவில் ஜில்லா, வீரம் வியாபாரம் மகேஷ் பாபு படத்தால் பாதிப்பா?
பெங்களூர்: கர்நாடகத்தில் பொங்கல் அன்று மகேஷ் பாபுவின் நேஒக்கடினே படம் ரிலீஸாவதால் அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனையாக உள்ளதாம்.
பொங்கல் அன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா மட்டும் ரிலீஸாகவில்லை இன்னொரு முன்னணி நடிகரின் படமும் ரிலீஸாகிறது. தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள மகேஷ் பாபுவின் நேஒக்கடினே படமும் பொங்கல் அன்று தான் ரிலீஸ் ஆகிறது.
மகேஷ் பாபு படம் ரிலீஸானால் என்ன என்று தானே நினைக்கிறீர்கள்? தொடர்ந்து படியுங்கள் தெரியும்.

கர்நாடகா
கர்நாடகத்தில் பெங்கல்/சங்கராந்தி அன்று மகேஷ் பாபுவின் நேஒக்கடினே படம் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

தியேட்டர்
கர்நாடகாவில் மகேஷ் பாபுவின் படம் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதால் ஜில்லா மற்றும் வீரம் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மல்டிபிளக்ஸ்
கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை மகேஷ் பாபுவின் படத்திற்கு புக் செய்துவிட்டனர். பெங்களூரில் உள்ள மல்டிபிளக்சஸ்களில் உள்ள தியேட்டர்களும் பெரிய திரைகளை அந்த படத்திற்கே ஒதுக்கியுள்ளன என்று சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

தமிழகம்
தமிழகத்தில் பல்வேறு அரங்குகளில் ரிலீஸாகும் ஜில்லா மற்றும் வீரம் கர்நாடகத்தில் தியேட்டர்களை பெற மகேஷ் பாபுவின் படத்தோடு போட்டி போட வேண்டி உள்ளது.


Click it and Unblock the Notifications











