4வது திருமணத்திற்கு தயாராகும் மகேஷ் பாபு சகோதரர்.. பிரபல நடிகையைத்தான் தேர்ந்தெடுத்திருக்காரு!

பெங்களூரு : நடிகர் மகேஷ் பாபு குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி தற்போது தனது 200வது படத்தை நெருங்கி வருகிறார்.

அவரது படங்களின் தேர்வு, சிறப்பான நடிப்பு, ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியான உணர்ந்து நடிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அவரை தெலுங்கு படவுலகின் சூப்பர்ஸ்டாராக வைத்துள்ளது.

இந்நிலையில் மகேஷ் பாபுவின் பெயர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக அடிப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு அவர் காரணம் இல்லை.

நடிகர் மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு தெலுங்குப் படவுலகின் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களை கவர்ந்தவராக காணப்படுகிறார். அவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து அவர் நடித்திருந்த சர்க்காரு வாரி பட்டா படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்மழை பொழிந்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மகேஷ் பாபு. தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே காணப்படுகிறார். அவரது படங்களும் அப்படித்தான். தற்போது ராஜ மௌலி இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மகேஷ் பாபு சகோதரர் 4வது திருமணம்

மகேஷ் பாபு சகோதரர் 4வது திருமணம்

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவரது பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக அடிபட்டு வருகிறது. ஆனால் விஷயம் அவர் குறித்தது இல்லை. அவரது சகோதரர் நரேஷ் குறித்த விஷயத்தில் மகேஷ் பாபுவின் பெயரும் சேர்ந்து அடிபட்டு வருகிறது. மகேஷ் பாபுவின் சகோதரரின் 4வது திருமணம் குறித்து தான் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

நடிகையை மணக்கவுள்ள நரேஷ்

நடிகையை மணக்கவுள்ள நரேஷ்

இதுவரை நரேஷ் மூன்று திருமணங்களை முடித்த நிலையில், அவர்களுடன் விவாகரத்தும் முடிந்து தற்போது சிங்கிளாகத்தான் உள்ளார். சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கோயிலுக்கு விசிட்

பிரபல கோயிலுக்கு விசிட்

இதுகுறித்து முன்னதாகவே பல தகவல்கள் வெளியான நிலையில் சமீபத்தில் இருவரும் இணைந்து பிரபல மகாபலேஸ்வரர் கோயிலுக்கு சென்றது இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் பவித்ரா தனது கணவர் லோகேஷை இதுவரை விவாகரத்து செய்யாத நிலையில், இவர்களது திருமணம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

மௌனம் காக்கும் ஜோடி

மௌனம் காக்கும் ஜோடி

ஆனாலும் இந்த விஷயத்தில் நரேஷும் பவித்ராவும் இதுவரை வாய் திறந்து எதுவும் பகிர்ந்துக் கொள்ளாத நிலையில், ரசிகர்கள் மட்டும் பலவிதமான யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். விரைவில் இந்த விஷயம் குறித்து அவர்கள் இருவரும் பேசும் நிலையில், இந்த விஷயத்தில் தெளிவு ஏற்படும்.

சிறப்பான வாழ்க்கைமுறை

சிறப்பான வாழ்க்கைமுறை

மகேஷ் பாபு தன்னுடைய படங்களில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பாக காணப்படுகிறார். சமீபத்தில் இவரது திருமண நாள் கொண்டாட்டத்தின்போது தன்னுடைய 17 ஆண்டுகால திருமண வாழ்க்கை குறித்த நினைவலைகளை அவரும் அவரது மனைவியும் பகிர்ந்துக் கொண்டனர்.

40+ வயதில் 4வது திருமணம்

40+ வயதில் 4வது திருமணம்

ஆனால் 40 வயதை கடந்த அவரது அண்ணன் நரேஷ் இதுவரை 3 திருமணங்களை முடித்துவிட்டு தற்போது நான்காவது திருமணத்திற்கு தயாராகி வருவது பல்வேறு விமர்சனங்களை டோலிவுட்டில் ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு இளையவரான மகேஷ் பாபுவின் சிறப்பான வாழ்க்கை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X