அதிர்ச்சி.. டோலிவுட் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபு காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
பழம்பெரும் நடிகர் சூப்பர்ஸ்டார் கிருஷ்ணாவின் மூத்த மகன் கட்டமனேனி ரமேஷ் பாபு திடீரென காலமான செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ரமேஷ் பாபு 20க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

ரமேஷ் பாபு காலமானார்
தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான் கிருஷ்ணாவின் மூத்த மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான ரமேஷ் பாபு இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 56. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

மகேஷ் பாபுவின் சகோதரர்
டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனும் பிரபல தயாரிப்பாளருமான ரமேஷ் பாபு உடல் நலக் குறைவாக காலமான நிலையில், ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மகேஷ் பாபு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மகேஷ் பாபுவுக்கு கொரோனா
நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் நியூ இயர் கொண்டாட்டத்துக்காக துபாய் சென்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா பரவியதாக சில தினங்களுக்கு முன்னதாக ட்வீட் போட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் மகேஷ் பாபு இறுதி சடங்கில் எப்படி கலந்து கொள்வார் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ரசிகர்கள் சோகம்
மகேஷ் பாபுவுக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், மகேஷ் பாபுவின் நிலையை நினைத்தும் அவரது அண்ணனின் இழப்பை நினைத்தும் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும், நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மகேஷ் பாபுவுக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், மகேஷ் பாபுவின் நிலையை நினைத்தும் அவரது அண்ணனின் இழப்பை நினைத்தும் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும், நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

20 படங்கள்
அப்பா கிருஷ்ணா நடிப்பில் வெளியான அல்லூரி சீதராமராஜு படத்தில் குழந்தை அல்லூரி சீதராமராஜுவாக 1974ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான ரமேஷ் பாபு. 1987ம் ஆண்டு வெளியான சாம்ராட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பஜார் ரவுடி, பிளாக் டைகர், பச்ச தோரணம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், 1997ம் ஆண்டு வெளியான என்கவுன்ட்டர் படத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகினார். பின்னர் 2004ம் ஆண்டு கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்நிலையில், திடீரென மாரடைப்பு காரணமாக ரமேஷ் பாபு உயிரிழந்தது திரையுலகத்திற்கு பெரிய இழப்பாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











