வெற்றிகரமாக 50வது நாள்.. சரிலேறு நீக்கெவ்வரு.. மகேஷ் பாபுவின் அடுத்த ஹிட்!

சென்னை : தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவரு திரைப்படம் 50வது நாளை எட்டியுள்ளதை ரசிகர்கள் கொண்டாட்டம்.

தமிழ்நாட்டில் பிறந்த வளர்ந்து பின் ஆந்திர சென்று அங்கு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு. இவர் அப்பா கிருஷ்ணா அவரும் ஒரு பழம்பெரும் நடிகர். இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த கையோடு விசாகப்பட்டிணம் சென்று தனது நடிப்புக்கான பயிற்சியை இயக்குனர் சத்யனந்த் இடம் கற்றார்.

 Mahesh Babus ‘sarileru neekevvaru‘ movie success

நீடா என்ற படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஒரு நடிகராக ராஜ குமாரடு என்ற படத்தில் ப்ரீத்தி ஜிந்தா உடன் இணைந்து நடித்தார் மகேஷ் பாபு. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் மகேஷ் பாபு.

இவருக்கு ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது ஒக்கடு. இப்படம் ஆந்திரா மட்டுமல்லாது சென்னையில் கூட பல வசூல் சாதனை புரிந்தது. பின் போக்கிரி என்ற படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் ஒரு வெற்றி நாயகனாக வலம் வர தொடங்கினார். இவரால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பயன் அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் சங்கராந்திக்கு மகேஷ் பாபு மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சரிலேறு நிக்கேவரு படம் வெளிவந்தது. அன்று தொடங்கி இன்று வரை அந்த திரைப்படம் பல சாதனைகளை செய்து வருகிறது. ஆந்திராவின் திரைப்படங்கள் செய்த சாதனையை இந்த படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த திரைப்படம் 50வது நாளை எட்டியுள்ளது. இதனை மகேஷ் பாபு ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை கொண்டாடும் விதமாக படக்குழு "மைன்டு ப்ளாக்" வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா படு கவர்ச்சியாக மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ஆடும் குத்தாட்டாம் தான் இந்த பாடல். ஒட்டுமொத்ததில் மகேஷ் பாபு இந்த வருட ஆரம்பத்தில் தனது படம் மூலம் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X