மகேஷ் பாபு -கீர்த்தி சுரேஷ் சூட்டிங் முடிஞ்சுடுச்சு... அடுத்தது என்ன ரிலீஸ்தான்

ஐதராபாத் : தெலுங்கு சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் மகேஷ் பாபு. இவருக்கு தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் இவரது சர்க்காரு வாரி பட்டா படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

நடிகர் மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவரது அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி இவரது சரிலேரு நீக்குவாரு படம் ரிலீசாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

சர்க்காரு வாரி பட்டா படம்

சர்க்காரு வாரி பட்டா படம்

இந்தப் படத்தை அனில் ரவிப்புடி இயக்கியிருந்தார். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் எட்டியது. தொடர்ந்து வம்சியின் இயக்கத்தில் இணையவுள்ளார் மகேஷ் பாபு. இதனிடையே, கீதா கோவிந்தம் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு இணைந்துள்ள படம் சர்க்காரு வாரி பட்டா.

மகேஷ் பாபு தயாரிப்பு

மகேஷ் பாபு தயாரிப்பு

இந்தப் படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபு இணைந்து இந்தப் பத்தை தயாரித்துள்ளனர். தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

மே 12ல் ரிலீஸ்

மே 12ல் ரிலீஸ்

கொரோனா காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப் போன நிலையில் படம் மே மாதம் 12ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. இதனிடையே படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.

நிறைவடைந்த பாடல் சூட்டிங்

நிறைவடைந்த பாடல் சூட்டிங்

படத்தின் ஒரு பாடலின் சூட்டிங் மட்டும் நடத்தப்படவிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூட்டிங் நடத்தப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனிடையே படத்தின் டைட்டில் பாடல் இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சூட்டிங் நிறைவு

சூட்டிங் நிறைவு

இதனிடையே படத்தின் மொத்த சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மகேஷ் பாபுவின் முந்தைய படங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் படமும் சூப்பர் டூப்பர் வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X