மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்... ரசிகர்கள் ஏமாற்றம்!
ஐதராபாத் : மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகவுள்ள படம் சர்க்காரு வாரி பாட்டா.
இந்தப் படம் ஜனவரி 23ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்து அறிவித்துள்ளது படக்குழு

நடிகர் மகேஷ் பாபு
டோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் மகேஷ் பாபு. இவரது அதிரடி நடிப்பில் பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரியவராக இவர் தெலுங்குப் படவுலகில் உள்ளார்.

சர்க்காரு வாரி பாட்டா படம்
இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் சர்க்காரு வாரி பாட்டா படம் மும்முரமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் படம் ஜனவரி 23ம் தேதி ரிலீசாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளியீட்டில் மாற்றம்
இந்நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் ஆர்ஆர்ஆர், பீம்லா நாயக், ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளதால் தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பரசுராம் பெட்லா இயக்கம்
இந்தப் படத்தின் சூட்டிங், ஐதராபாத், துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் டீசர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் விரைவில் ட்ரெயிலர் உள்ளிட்டவை ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரசுராம் பெட்லா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

நிதித்துறை பின்னணி கதை
படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் வங்கி அதிகாரியாக மகேஷ் பாபு நடித்துள்ளார். நிதித்துறையின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல்பார்வை உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

வெளியீட்டு தேதி மாற்றம்
இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். டோலிவுட்டில் மகேஷ் பாபுவிற்கு என்று அதிகமான ரசிகர்கள் காணப்படும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











