மகேஷ்பாபு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்

ஹைதராபாத் : ஆந்திர சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் " Sarkaru vari paata " . இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பரசுராம்.

மே 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படக்குழு இன்று மாலை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு குறித்து ஒரு தகவல் தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

பலத்த எதிர்பார்ப்பில்

பலத்த எதிர்பார்ப்பில் " Sarkaru vari paata "

மகேஷ்பாபு கடைசியாக நடித்த படம் சரிலெரு நீகேவரு. அணில் ரவிபுடி இயக்கத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து மகேஷ் பாபு " Sarkaru vari paata " படத்தில் நடிக்க துவங்கினார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. முன்னதாக படத்தின் 2 பாடல்கள் வெளியிடப்பட்டு யூடியூபில் பல மில்லியன் பார்வைகள் பெற்று சாதனை படைத்துள்ளது. கலாவதி பாடலில் சித் ஸ்ரீராம் பாட, இசை கோர்த்துள்ளார் இசையமைப்பாளர் தமன். இரண்டாவது பாடலான penny சாங் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிறப்பம்சமாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடன காட்சியில் பங்கேற்றார்.

இயக்குனர் பரசுராம்

இயக்குனர் பரசுராம்

" Sarkaru vari paata " படத்தின் இயக்குனர் பரசுராம். இவர் இதற்கு முன்பு கீதா கோவிந்தம் எனும் சூப்பர் ஹிட் படத்தை தந்தவர். விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த அந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது மார்க்கெட் உயர்வதற்கு முக்கிய காரணமாக இந்தப் படம் அமைந்தது. இதற்கு முன்னர் இந்த இயக்குனர் 5 படங்கள் இயக்கியிருந்தாலும் கீதா கோவிந்தம் திரைப்படம் அவருக்கு ஸ்டார் இயக்குனர் அந்தஸ்தை பெற்று தந்தது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றி அவரை மகேஷ்பாபுவை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. யாரும் எதிர்பாராத இந்த காம்பினேஷன் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PAN Indian movie

PAN Indian movie

மகேஷ்பாபு தெலுங்கில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க ரசிகர்களை வைத்துள்ள நடிகர் ஆவார். தமிழ்நாட்டில் அவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அதனால் " Sarkaru vari paata " படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கூடிய விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதில் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் எனவும் பேசப்படுகிறது. இதற்கு முன்னர் RRR மற்றும் புஷ்பா படங்களின் வெற்றியை தொடர்ந்து" Sarkaru vari paata " படமும் சூப்பர் ஹிட் ஆகும் என கணிக்கப்படுகிறது.

ட்ரெய்லர் வெளியீட்டு தேதி

ட்ரெய்லர் வெளியீட்டு தேதி

Sarkaru vari paata " படக்குழு இன்று வெளியிட்ட ஒரு பதிவில் இன்று மாலை 4 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படம் மே 12ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் அதற்கான வேலைகளை துவங்க உள்ளது படக்குழு. இதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ட்ரைலர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிற கொண்டிருக்க அமெரிக்காவில் இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது. மற்ற எந்த தெலுங்கு நடிகரை விடவும் மகேஷ் பாபுவிற்கு அமெரிக்காவில் பெரிய மார்க்கெட் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X