இங்கே சார்பட்டா கலக்கியது போல.. அங்கே சர்காரு வாரி பாட்டா கலக்குமா? ரிலீஸ் எப்போ தெரியுமா?

ஹைதராபாத்: இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோலிவுட் நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அந்த அறிவிப்பை அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

டோலிவுட் சூப்பர்ஸ்டார்

டோலிவுட் சூப்பர்ஸ்டார்

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகராக அசத்தி வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்களுக்கு எல்லாமே ஒரிஜினல் ஓனர் இவர் தான். என்னதான் பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண் என பலர் கலக்கினாலும் மகேஷ் பாபுவுக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்கின்றனர்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

தெலுங்கு படங்களில் நடித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து வந்த மகேஷ் பாபுவுக்கு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசையை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் போக்கினார். அவர் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் பைலிங்குவல் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார் மகேஷ் பாபு. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஹிட் ஆகவில்லை.

முந்திய அல்லு அர்ஜுன்

முந்திய அல்லு அர்ஜுன்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவர் நடிப்பில் சரிலேரு நீக்கெவ்வரு படம் ரிலீசானது. ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தாலும் விமர்சன ரீதியாக பெருசா பேசப்படவில்லை. அதே சமயத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ மிகப்பெரிய ஹிட் அடிக்க இவரது கவனம் வேறு விதமாக திரும்பியது.

போர் அடிச்சுடுச்சு

போர் அடிச்சுடுச்சு

தத்துவம் சொல்லும் படங்களையும் சண்டை படங்களுமாகவே எடுத்துத் தள்ளி ரொம்பவே போர் அடிச்சுடுச்சு என ஓப்பனாகவே ஸ்டேட்மென்ட் கொடுத்த மகேஷ் பாபு, அதற்காக பிரபல ஆக்‌ஷன் இயக்குநரின் பட வாய்ப்பை மறுத்துவிட்டு இயக்குநர் பரசுராமின் இந்த படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

கீதா கோவிந்தம் இயக்குநர்

கீதா கோவிந்தம் இயக்குநர்

படு ஜாலியாக ஒரு ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை தான் தெலுங்கு சினிமா ரசிகர்கள் விரும்புகின்றனர் என்பதை அலா வைகுந்தபுரமுலோ படத்தின் வெற்றியின் மூலம் கணித்த மகேஷ் பாபு கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குநர் பரசுராமுக்கு தன்னை இயக்கும் வாய்ப்பை அளித்தார் மகேஷ் பாபு.

கீர்த்தி சுரேஷ் ஜோடி

கீர்த்தி சுரேஷ் ஜோடி

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கராந்தி ரிலீஸ்

சங்கராந்தி ரிலீஸ்

மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் படமான சர்காரு வாரி பாட்டா அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என நடிகர் மகேஷ் பாபு தற்போது ட்வீட் போட்டு அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 13ம் தேதிக்கு திரையரங்குகளில் சர்காரு வாரி பாட்டா ரிலீசாகும் என அறிவித்துள்ளார்.

ராஜமெளலி படம்

ராஜமெளலி படம்

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தால் இந்த ஆண்டு இறுதியில் கூட படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை உருவாகி இருப்பதால் ராஜமெளலி படமும் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாக திட்டமிடப்பட்டால் மிகப்பெரிய போட்டி உருவாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X