கலவையான விமர்சனங்கள்... ஆனாலும் சூப்பர்ஸ்டார் படம்னா சும்மாவா... முதல்நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
ஐதராபாத் : தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது சர்க்காரு வாரி பட்டா. இந்தப் படத்தில் முதல்முறையாக அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவையும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

சர்க்காரு வாரி பட்டா படம்
தெலுங்கு சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் நடிகர் மகேஷ் பாபு தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது சர்க்காரு வாரி பட்டா படம் கடந்த ஜனவரி மாதமே ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

விமர்சனங்களை ஏற்படுத்திய படம்
இந்நிலையில் நேற்றைய தினம் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. கீதா கோவிந்தம் என்ற கொண்டாட்டமான படத்தை கொடுத்த இயக்குநர் பரசுராம் இதுபோன்ற கதைக்களத்தில் படத்தை கொடுத்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான பாடல்கள்
படத்தின் இசையமைப்பை தமன் மேற்கொண்டுள்ள நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இதேபோல முன்னதாக வெளியான படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை சிறப்பாக அமைந்திருந்தன. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்தை எதிர்கொண்டனர்.

கீர்த்திக்கு கட்அவுட்
இதேபோல நடிகை கீர்த்தி சுரேஷும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு முதல்முறையாக ஜோடியாகியிருந்தார். அவரது நடனமும் படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்தது. அவருக்கு ஐதராபாத்தில் ஒரு திரையரங்கில் ரசிகர்கள் கட்அவுட் வைக்கும் அளவிற்கு இந்தப் படத்தில் அவருக்கு வரவேற்பு காணப்பட்டது.

கலவையான விமர்சனங்கள்
ஆனால் படத்தின் மோசமான திரைக்கதையால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. முதல் பாதி நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாகவும் இரண்டாவது பாதி உணர்ச்சிப் பூர்வமாகவும் இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இந்தப் படத்திற்கு வரவேற்பு இல்லை என்றாலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 36 கோடிகளை படம் வசூலித்துள்ளது.

முதல் நாள் கலெக்ஷன்
இந்நிலையில் இந்தப் படம் நேற்று முதல் நாளில் மட்டுமே 75 கோடி ரூபாய் வசூலை உலகளவில் பெற்றுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் வேட்டை துவங்கியுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











