தளபதி விஜய்யோட படம் பண்ண தாராளமா ரெடி.. உருவாகிறதா மகேஷ் பாபு, விஜய் காம்போ?

Recommended Video

விஜயுடன் படம் நடிக்க ரெடி... உருவாகிறதா மகேஷ் பாபு, விஜய் காம்போ?

சென்னை: தளபதி விஜய்யுடன் படம் பண்ண தாராளமா ரெடி என டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள Sarileru Neekkevvaru திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. #SarileruNeekkevvaru ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

சரிலேரு நீக்கேவாரு

சரிலேரு நீக்கேவாரு

டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கேவாரு படம் சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு நேற்று வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமன்னா பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.

தமிழ் பேட்டி

தமிழ் பேட்டி

மகேஷ் பாபு தனது புதிய படத்தை தமிழகத்தில் புரொமோட் செய்ய அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

லயோலா ஸ்டூடன்ட்

லயோலா ஸ்டூடன்ட்

மகேஷ் பாபு தனது கல்லூரி காலத்தை சென்னையில் தான் கழித்தார். சூர்யா, கார்த்தி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலருடன் சென்னை லயோலா கல்லூரியில் படித்த அனுபவத்தையும் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய்யுடன் படம்

தளபதி விஜய்யுடன் படம்

பேட்டியின் இடையே ஸ்பைடர் படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ், தளபதி விஜய், மகேஷ் பாபுவுடன் இணைந்து பணிபுரிய சம்மதம் தெரிவித்திருந்ததாகவும், அதற்கு உங்கள் பதில் என்ன என தொகுப்பாளர் கேட்க, தளபதி விஜய்யுடன் இணைந்து பணி புரிவதற்கு கொடுத்து வச்சிருக்கணும். நல்ல இயக்குநர், சிறந்த கதை அமைந்தால் நிச்சயம் பண்ணலாம் என்றார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தை முன்னதாக விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். ஆனால், கால்ஷீட் காரணங்களுக்காக அந்த கூட்டணி உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபுவுக்கு பிடித்த இயக்குநர்

மகேஷ்பாபுவுக்கு பிடித்த இயக்குநர்

அந்த பேட்டியில் மகேஷ் பாபுவுக்கு பிடித்த தமிழ் இயக்குநர் யார் என்ற கேள்விக்கு சட்டென்று ஷங்கர் சார் என பதிலளித்தார்.

தளபதி 65

தளபதி 65

ஏற்கனவே தளபதி 65 படத்தை ஷங்கர் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் அந்த படம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X