Indigo: மகேஷ் பாபுவின் அண்ணனுக்கே அல்வா கொடுத்த இண்டிகோ.. டிவிட்டரில் கதறுறாரே.. ஒரே அசிங்கமாம்!

ஹைதராபாத்: இண்டிகோ விமானங்கள் அடுத்தடுத்து முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன் தினம் அதாவது டிசம்பர் 5ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் சுமார் 1000 விமானங்களை ரத்து செய்தது இண்டிகோ. இதனால் மொத்த நாடும் உள்நாட்டு விமான சேவை பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான விமான பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள். இதில் முதியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், நோயாளிகள் என பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதில் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தான் எப்படி எல்லாம் சிரமங்களை எதிர் கொண்டேன் என்று நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன், நரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், " காலை 8.15 மணிக்கு ஹைதராபாத் இண்டிகோ டெர்மினலில் சரியான நேரத்தில் போய் சேர்ந்தேன். ஆனா எல்லா இண்டிகோ விமானங்களும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் தாமதம். போர்டிங் ஆரம்பிச்சதும் உள்ளே ஏறி உட்கார்ந்தால், "சாப்பாடு முடிஞ்சு போச்சு சார், ப்ரீ-புக் பண்ணலைன்னா கிடைக்காது"னு சிரிச்ச முகத்தோட சொல்றாங்க. வயிறு கொதிக்குது.

Mahesh Babu Step Brother Naresh Slams Indigo Cricis After Flight Dealy and Cancellation on X Page

அசிங்கம்: அதுக்கு அப்புறம், விமானம் டேக்-ஆஃப் ஆவுதுக்குள்ளே ஷாப்பிங் ஆரம்பிச்சிடறாங்க. முன்னாடி உட்கார்ந்திருக்குறவங்க எல்லாம் எழுந்து நின்னு, ட்ராலி நடுவுல மாட்டிக்கிச்சு, யாரும் முன்னே போக முடியல, பின்னே போக முடியல. கிரவுண்ட் ஸ்டாஃப்-கும் பயணிகளுக்கும் நடுவுல சண்டை ரெடி என்பது போல இருந்துச்சு. அசிங்கம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு.

ஒரே நாத்தம்: மொதல்ல ஷூஸ் கழற்று, பெல்ட் கழற்று, லேப்டாப் வெளியில எடு, 100 மில்லிக்கு மேல ஏதாவது இருந்தா கொட்டு என்று சொல்வார்கள். மாஸ்க் போட்டாலும், சன் கிளாஸ் போட்டாலும், தொப்பி போட்டாலும் ஃபேஸ் ரெகக்னிஷன் கேமரா "ஹாய் ஸ்ரீனு, எப்படி இருக்க?"னு கேக்குற மாதிரி அடையாளம் கண்டுபிடிச்சிடுது. ஒரு நொடி தனியுரிமையும் இல்லை. 90களுக்கு ஒரு டைம் மெஷின் இருந்தா போதும், டிக்கெட் கவுண்டர்ல நின்னு "சார், விண்டோ சீட் கிடைக்குமா?"னு கேப்பேன்.

அழுக்கு: அப்போ இண்டியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எல்லாம் ராஜாவத்தனமா ஓடிச்சு. உள்ளே ஏறினா சுத்தமா இருக்கும், சாப்பாடு ஹாட்டா வந்ததும் சாப்பிடலாம், யாரும் உங்களை ஸ்கேன் பண்ணி "இவன்தான் ஃப்ளைட் மிஸ் பண்ணுனவன்"னு சொல்ல மாட்டாங்க. இப்போ விமானம் என்றால் ஃபுல்லா பாக்டீரியா நிறைஞ்சு இருக்கிற மாதிரி இருக்கு. மாஸ்க் இல்லாம எப்படியாவது ஏற முடியுமான்னு பாக்குறேன், முடியல" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X