Mahesh Babu - இன்னொருவர் செய்ததை நான் ஏன் செய்ய வேண்டும்?.. ரீமேக் பற்றி மகேஷ் பாபு சொன்னதை கேளுங்க
ஹைதராபாத்: Mahesh Babu (மகேஷ் பாபு) நடிகர் மகேஷ் பாபு இதுவரை ஒரு ரீமேக் படத்தில்கூட நடிக்காததற்கு காரணம் குறித்து மகேஷ் பாபு விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆந்திராவை சேர்ந்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கிருஷ்ணாவுக்கு மகனாக பிறந்தவர் மகேஷ் பாபு. 1975ஆம் ஆண்டு பிறந்த அவர் தன்னுடையா நான்காவது வயதிலேயே நீடா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து வரிசையாக எட்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தார்.

லீட் ரோல்: அதன் பிறகு 1999ஆம் ஆண்டு வெளியான ராஜ குமாருடு என்ற படத்தின் மூலம் லீட் ரோலில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. அடுத்ததாக அவர் நடித்த படங்கள் டீசண்ட்டான வரவேற்பை பெற்றதால் கவனிக்கப்படும் கதாநாயகனாக மாறினார். அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் ஒக்குடு. அந்தப் படம்தான் தமிழில் கில்லியாக ரீமேக்காகியது குறிப்பிடத்தக்கது
பிரின்ஸ் மகேஷ் பாபு: மகேஷ் பாபுவை தெலுங்கு ரசிகரக்ள் பிரின்ஸ் என்று அழைப்பார்கள். ஒக்குடு படத்துக்கு பிறகு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மெகா ஹிட்டாகின. இதன் காரணமாக தெலுங்கின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வளர்ந்துவிட்டார். மேலும் இந்திய அளவிலும் ஃபேமஸ்டான நடிகராக தற்போது இருக்கிறார்.
ரீமேக் படத்தில் நடித்ததில்லை: மகேஷ் பாபு நடித்த படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக்காகியுள்ளன. ஏன் விஜய் மகேஷ் பாபுவின் படங்களால்தான் தப்பிக்கிறார். அவரது படங்களை ரீமேக் செய்துதான் மெகா ஹிட்டுகளை கொடுக்கிறார் என்ற பேச்சு ஓடுவதுண்டு. ஆனால் மகேஷ் பாபுவோ இதுவரை ஒரு ரீமேக் படத்தில்கூட நடித்ததில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

ஏன் நடிக்கவில்லை: எதற்காக ரீமேக் படத்தில் நடித்ததில்லை என்பது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், "நீங்கள் ஏன் ரீமேக் படங்களை செய்யக்கூடாது என பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஏற்கனவே ஒரு பாத்தை பார்த்துவிட்டு செட்டுக்கு சென்றால் அதில் என்ன புதிய விஷயம் இருக்கப்போகிறது. அந்த ஹீரோ செய்ததையா மீண்டும் நான் செய்ய வேண்டும். முதலில் அதை நீங்கள் செய்வீர்களா?.. எப்படி அதை செய்வது. அதனால்தான் அதனை நான் தவிர்க்கிறேன்.
நான் ரீமேக்குக்கு எதிரானவன் என பல முறை சொல்லியிருக்கிறேன். ரீமேக் படங்களோடு ஒப்பிடுவது சகஜம்தான்.அதில் எவ்வளவு நடித்தாலும் சில சமயங்களில் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த ஹீரோவை இமிட்டேட்ட் செய்கிறார் என்ற கருத்து எழும். எதற்காக இதுபோன்ற விஷயங்களில் ரிஸ்ட்க் எடுக்க வேண்டும் என்றுதான் ரீமேக்கிலிருந்து ஒதுங்கியே இருக்கிறேன்" என்றார். மகேஷ் பாபு அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அவர் இன்று தனது 48ஆவது பிறந்தநாள கொண்டாடுகிறார்.


Click it and Unblock the Notifications











