உத்தமபுத்திரன் படத்தில் அப்படி காமெடி பண்ணுவாரே.. ஜெயபிரகாஷ் ரெட்டி மரணம்.. பிரபலங்கள் இரங்கல்
ஐதராபாத்: டோலிவுட் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த டோலிவுட் திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது.
Recommended Video
தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி, தனுஷின் உத்தமபுத்திரன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கும் மிகவும் பரீட்சயமானவர்.
ஜெயபிரகாஷ் ரெட்டியின் மறைவுக்கு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மிகப்பெரிய ஷாக்
டோலிவுட் திரையுலகினருக்கும் பிரபல வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டியின் மறைவு செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியையே கொடுத்துள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்து வரும் நிலையில், இவரது மறைவும் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோலிவுட் நடிகர் கோபிசந்த், ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு என இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் இரங்கல்
இது மிகவும் வருத்தமான செய்தி, ஜெயபிரகாஷ் காரு உடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயபிரகாஷ் ரெட்டியின் ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டுள்ளார்.

எல்லோரையும் மகிழ்வித்தவர் போய்ட்டாரே
வில்லனாக மிரட்டியும், காமெடியால் சிரிக்கவும் வைத்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெயபிரகாஷ் ரெட்டி. அவரது மறைவு செய்தியை கேட்ட ஜூனியர் என்.டி.ஆர்., தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். எல்லோரையும் மகிழ்வித்தவர் போய்ட்டாரே.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என ட்வீட் போட்டுள்ளார்.

தனுஷ் பட நாயகி
நடிகர் தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் ஈடு இணையற்ற காமெடி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார் ஜெயபிரகாஷ் ரெட்டி. அவரது மறைவு செய்தி அறிந்த பட்டாஸ் பட நாயகி மெஹ்ரின் பிர்ஸடா, உங்களின் மறைவு, தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரிக்கே மிகப்பெரிய பேரிழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெனிலியா இரங்கல்
நடிகை ஜெனிலியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயபிரகாஷ் ரெட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருந்தாலே ஒரே சந்தோஷமாகத்தான் இருக்கும். அந்த நினைவுகளை எப்போதுமே நினைத்துப் பார்ப்பேன். உங்களை இழந்து வாடும் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மகேஷ் பாபு இரங்கல்
இந்த ஆண்டு வெளியான மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவ்வறு படத்தில் வில்லன் பிரகாஷ் ராஜின் தந்தையாக நடித்து கலக்கி இருப்பார் ஜெயபிரகாஷ் ரெட்டி. அவரது மறைவு செய்தி அறிந்து மிகவும் உடைந்து போயுள்ளார் மகேஷ் பாபு. தெலுங்கு திரையுலகின் மறக்கமுடியாத நடிகர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











