மகேஷ் பாபு முதல் மஞ்சிமா மோகன் வரை.. ரிஷி கபூருக்கு இரங்கல் தெரிவித்த தென்னிந்திய பிரபலங்கள்

சென்னை: பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மறைவு தென்னிந்திய நடிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Recommended Video

Rishi Kapoor demise shook the nation and Bollywood

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான கமல் மற்றும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பவன் கல்யாண், மற்றும் பல நடிகைகளும் ரிஷி கபூருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் பிரபலங்களான அமீர்கான், பூமி பெட்னேகர், அனுஷ்கா ஷர்மா, போனி கபூர், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் முன்னதாக இரங்கல் தெரிவித்தனர்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மறைவு செய்தியை கேட்டவுடன் முழுவதுமாக உடைந்து போனேன். சிறந்த நடிகர், லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்துடிபு, சினிமாவில் நுழையும் பலருக்கும் முன்னோடியாக திகழ்பவர், நல்ல நண்பர், அவரது மறைவு இதயத்தையே பாராமாக மாற்றியிருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என நடிகர் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு, பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மறைவு செய்தியை அறிந்தவுடன் தனது இதயமே நொறுங்கி போனதாக கூறியுள்ளார். மேலும், சினிமா உலகில் ரிஷி கபூரின் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்றும், உண்மையான அந்த நடிகரை சினிமா உலகம் என்றுமே மறக்காது என்றும், அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

ஸ்ரீ ரிஷி கபூர் சாரின் மரணம் இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கி இருக்கிறது. அவரது மறைவு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பவர்ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் ட்வீட் போட்டுள்ளார்.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

நேற்று பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மறைவு செய்தியை அறிந்தே இந்திய சினிமா துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்நிலையில், மற்றுமொரு ஈடு செய்ய முடியாத நடிகரின் இழப்பு மிகவும் வருத்த மடைய செய்துள்ளதாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மஞ்சிமா மோகன்

மஞ்சிமா மோகன்

பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி, இந்தி நடிகர் ரிஷி கபூரின் இந்த திடீர் மறைவுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து பதிவுகளை போட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் மஞ்சிமா மோகன் ‘ஹார்ட் பிரேக்கிங்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X