ஜாலியா படம் பண்ணனும்.. மகேஷ் பாபுவின் அந்த ஆசையை இவர்தான் நிறைவேற்றப் போகிறாரா?

ஹைதராபாத்: டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தை கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநர் தான் இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மகேஷ் பாபு நடிப்பில், ஜனவரி மாதம் வெளியான சரிலேறு நீக்கெவரு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதற்கு பதிலாக, அல்லு அர்ஜுனின் ஃபேமிலி என்டர்டெயினர் படமான அலா வைகுந்தபுறமுலோ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

தீர்மானம்

தீர்மானம்

அந்த படத்தின் வெற்றியை பார்த்த மகேஷ் பாபு, அடுத்த படம் நிச்சயம் மெசேஜ் ஓரியன்ட் படமாகவோ, நாட்டை காப்பாற்றும் படமாகவோ இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். அதுபோன்ற கதைகளை ரிஜெக்ட் பண்ணி வந்த மகேஷ் பாபு, தற்போது பக்காவான ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படத்தில் அடுத்த நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீதா கோவிந்தம் இயக்குநர்

கீதா கோவிந்தம் இயக்குநர்

இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் 130 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற "இன்கேம் இன்கேம் காவாலே" பாடல் டோலிவுட்டை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமானது.

மெசேஜ் படம்

மெசேஜ் படம்

ஸ்ரீமந்துடு, பரத் அனி நேனு, மகரிஷி, சரிலேரு நீக்கெவரு என தொடர்ந்து மெசேஜ் சொல்லும் மாஸ் ஆக்‌ஷன் படங்களிலேயே மகேஷ் பாபு நடித்து வருகிறார். அதனால், அடுத்த படத்தில் அதுபோன்ற கதை வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். சமீபத்தில், மகரிஷி படத்தை இயக்கிய வம்சி படிப்பலி சொன்ன மெசேஜ் ஓரியன்ட் கதையையும் மகேஷ் பாபு ரிஜெக்ட் செய்ததாக தகவல்கள் வெளியானது.

புடிச்சு போச்சு

புடிச்சு போச்சு

இந்நிலையில், கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநர் பரசுராம், மகேஷ் பாபுவை அப்ரோச் செய்து அட்டகாசமான ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் கதையை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட மகேஷ் பாபுவுக்கு மிகவும் பிடித்துப் போக, SSMB 27 படத்தை பரசுராம் இயக்குவது உறுதியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் எம்.பி. என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயின் யார்?

ஹீரோயின் யார்?

சரிலேரு நீக்கெவரு படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த நிலையில், மகேஷ் பாபுவின் 27வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அலா வைகுந்தபுறமுலோ வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸின் 20வது படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே, அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X