Don't Miss!
- News
பக்காமூவ்.. மோடி, அமித்ஷாவின் நம்பிக்கை.. கர்நாடகா பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான்..காரணமே இதுதான்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வேறலெவல் மாஸா இருக்கப் போகுது.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அந்த பிரபல நடிகர் பங்கேற்பா?
சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இசை வெளியீட்டு விழாவுக்கு லோகேஷ் கனகராஜ், அட்லி உள்ளிட்ட ஏகப்பட்ட முன்னணி சினிமா பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோலிவுட்டில் இருந்து டாப் நடிகர் ஒருவர் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாரிசு இசை வெளியீட்டு விழா.. லைவ் செய்யப்படுகிறதா? அதுவும் அந்த சேனலிலா? அப்போ அது கன்ஃபார்ம் தான்!

லைவ் இல்லை
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் நேரலையில் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியான நிலையில், லைவ் செய்யப்படவில்லை என்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக வாரிசு இசை வெளியீட்டு விழா வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ் ஸ்பீச்
மைக்கை பிடித்து இந்த முறை பாஸ் ஆக நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என்றும் வாரிசு படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவரும் என்பது குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவுக்காக நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அம்மா அப்பா வருவார்களா
கடைசியாக நடைபெற்ற மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அம்மா சோபா மற்றும் அப்பா சந்திரசேகர் கலந்து கொண்டனர். இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய்யின் பெற்றோர்கள் பங்கேற்பார்களா? என்கிற கேள்வி கிளம்பி உள்ளது.

கமல் பங்கேற்பாரா
பிக் பாஸ் ஷூட்டிங்கையே நடிகர் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமைக்கு மாற்றி உள்ள நிலையில், சனிக்கிழமை நடைபெற உள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசியல் தொடர்பான கூட்டத்திற்காக கமல் செல்ல உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பவன் கல்யாண் இல்லை
பவன் கல்யாண் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருவார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், பவன் கல்யாண் பங்கேற்பது கஷ்டம் தான் என்கின்றனர். ஆனால், பவன் கல்யாணுக்கு பதிலாக டோலிவுட்டின் டாப் ஹீரோ பங்கேற்க போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மகேஷ் பாபு பராக்
இயக்குநர் வம்சி இயக்கத்தில் முன்னதாக வெளியான மகரிஷி படத்தில் நடித்திருந்த மகேஷ் பாபு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. மகேஷ் பாபு மற்றும் விஜய் இருவரும் இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பது கன்ஃபார்ம்.

ஏமாற வேண்டாம்
வாரிசு ஆடியோ லாஞ்ச் பாஸ் தருகிறோம் என டிக்கெட் மோசடிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போலி டிக்கெட்டுகளை அதிக காசு கொடுத்து வாங்கி விஜய் ரசிகர்கள் கடைசி நேரத்தில் அனுமதி கிடைக்காமல் தவிக்க வேண்டாம். பொறுமையாக டிவி மற்றும் சோஷியல் மீடியாவில் வாரிசு இசை வெளியீட்டு விழாவை கண்டு ரசிக்கலாம்!