மாஸ்னா இதுதான் பாஸ்.. சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிடப் போறது யாருன்னு பாருங்க!

சென்னை: கோலிவுட்டை தாண்டி டோலிவுட்டிலும் தனது கொடியை நாட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Recommended Video

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | Siva Karthikeyan | Maveeran

சின்னத்திரையில் காமெடி தொகுப்பாளராக கலக்கிய சிவகார்த்திகேயன், தற்போது, தென்னிந்தியாவின் இளம் பிரின்ஸாக மாறி உள்ளார்.

நாளை அவரது அடுத்த படத்தின் அசத்தலான அறிவிப்பை பிரபல டோலிவுட் நடிகர் வெளியிடப் போகிறார் என்கிற அட்டகாசமான அப்டேட் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

#Sivakarthikeyan என்கிற ஹாஷ்டேக்கை போட்டு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ட்விட்டரை தற்போது தெறிக்கவிட்டு வருகின்றனர். டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு நூறு கோடி வசூல் படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்த நிலையில், கோலிவுட், டோலிவுட் என அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படம் வெளியாகிறது.

பிரின்ஸ் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் சிவகார்த்திகேயன்

எஸ்கே என்றும் பிரின்ஸ் என்றும் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். அதில், பிரின்ஸ் என்பதையே அடுத்த படத்தின் டைட்டிலாக மாற்றி ஜதி ரத்னலு படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் அட்டகாசமாக ஒரு ஜாலியான ரொமான்ஸ் படத்தை இயக்கி உள்ளார். உக்ரைன் நாட்டின் மாடல் அழகியான மரியா ரியாபோஷாப்கா நடித்து வருகிறார். வரும் தீபாவளிக்கு அந்த படம் திரைக்கு வருகிறது.

அடுத்த பட அறிவிப்பு

அடுத்த பட அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதில், ஒரு படத்தின் டைட்டில் மாவீரன் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என தெரிகிறது.

யார் வெளியிட போறா தெரியுமா

யார் வெளியிட போறா தெரியுமா

பிரின்ஸ் படத்தின் மூலம் டோலிவுட்டில் அடியெடுத்து வைக்கவுள்ள சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பு எழுந்துள்ளது. மேலும், எந்த படம் வந்தாலும், அந்த படத்திற்கு கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் பாராட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பை டோலிவுட்டின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நாளை காலை 10:10க்கு வெளியிட போகிறார் என்கிற படு மாஸான அப்டேட் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X