மகேஷ் பாபு மருமகனுக்கு கல்யாணம்.. தென் கொரியா காதலி.. நிச்சயதார்த்தம் எங்க நடந்துச்சுனு தெரியுமா?

சென்னை: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் குடும்பத்தில் தற்போது திருமண கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மகேஷ் பாபுவின் மருமகனும், தொழிலதிபர் கல்லா ஜெயதேவின் இளைய மகனுமான சித்தார்த் கல்லா, தனது நீண்ட நாள் காதலியான தென் கொரியாவைச் சேர்ந்த ஹேயின் கிம் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தொழிலதிபரும் முன்னாள் அரசியல்வாதியுமான கல்லா ஜெயதேவ் மற்றும் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரியான பத்மாவதி தம்பதியின் இளைய மகன்தான் சித்தார்த் கல்லா. திரையுலகில் இருந்து விலகி குடும்பத் தொழிலில் கவனம் செலுத்தி வரும் அவர், தென் கொரியாவைச் சேர்ந்த ஹேயின் கிம் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவருக்கும் குடும்பத்தினர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை மகேஷ் பாபுவின் மனைவியும், முன்னாள் நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். "கொண்டாட்டங்கள் தொடங்கட்டும். அழகான ஜோடியான சித்தார்த் மற்றும் ஹேயினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கை முழுவதும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமையட்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Mahesh Babu s Nephew Siddharth Galla Gets Engaged to South Korean Girlfriend in Italy

இந்த நிச்சயதார்த்த விழா இத்தாலியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியான புகைப்படங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

போட்டோஸ் டிரெண்ட்: நிச்சயதார்த்த புகைப்படங்களில் ஹேயின் கிம் அணிந்திருந்த மஞ்சள் நிற லெஹங்கா ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. மிகவும் எளிமையான தோற்றத்தில் அவர் காட்சியளித்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். "அழகான ஜோடி", "சூப்பரான மேட்ச்", "இருவருக்கும் வாழ்த்துகள்" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

சித்தார்த் கல்லாவின் அண்ணன் அசோக் கல்லா தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சித்தார்த் மட்டும் சினிமாவை தவிர்த்து குடும்பத்தினர் ஏற்கனவெ செய்து வரும் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். மறுபுறம், ஹேயின் கிம் சேவைத் துறையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவரது தொழில் குறித்த தகவல்கள் அதிகமாக வெளியாகவில்லை.

Mahesh Babu s Nephew Siddharth Galla Gets Engaged to South Korean Girlfriend in Italy

உலகம் சுற்றும் வாலிபப் பெண்: தென் கொரியா மணப்பெண்ணான ஹேயின் கிம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்ககூடியவர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, கலிபோர்னியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ள அவர், இந்தியாவிலும் ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு வந்துள்ள புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில், மகேஷ் பாபு குடும்பத்தில் நடந்துள்ள இந்த நிச்சயதார்த்த விழா தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X