SSMB29 படப்பிடிப்பில் மண்டியிட்ட மகேஷ் பாபு.. அப்செட்டான ராஜமெளி.. லீக்கான வீடியோ!

ஹைதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமெளலி யாரை வைத்து இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி முதல் முறையாக ராஜமெளலி - மகேஷ்பாபு கூட்டணியில் படம் உருவாகவுள்ளது உறுதியானது. இதனைத்தொடர்ந்து SSMB29 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகள் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜமெளியும் அப்செட்டில் இருக்கிறாராம்.

படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களத்தோடு படத்தை இயக்கி வருபவர் எஸ்.எஸ்.ராஜமெளி. ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்ரி, சை, தமிழில் வெளியாகி ஹிட்டான சிறுத்தை படத்தின் ஒரிஜினல் வெர்சன் விக்ரமார்க்டு, எமதொங்கா, மகதீரா, மரியாதை ராமண்ணா, ஈகா, சத்ரபதி, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான 12 படங்களும் மெஹாஹிட் பட வரிசையில் இடம்பிடித்துள்ளன. உலகில் தலைசிறந்த இயக்குநர்களின் வரிசையில் ராஜமெளியும் ஒருவராக இருக்கிறார்.

SSMB29 leak video Mahesh Babu SS Rajamouli

நீளமான தலைமுடி: இதுவரை தோல்வியே காணாத இயக்குநர் என்ற சிறப்பையும் ராஜமெளி பெற்றுள்ளார். மகேஷ் பாபு - ராஜமெளலி காம்போவில் முதல் முறையாக உருவாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்காக மகேஷ் பாபு தலைமுடியை மிக நீளமாக வளர்த்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ வைரலானது. அப்போது ஒரு பெண் அவரது தலைமுடியை பிடித்து இவ்வளவு நீளமா என கேட்பார். சிரித்துகொண்ட மகேஷ்பாபு செல்வார்.

பழங்குடியினர் நடனம்: SSMB29 படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும் என கூறப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்பில் பழங்குடியினத்தவர்கள் நடனம் ஆடுவது போன்ற பாடலை ராஜமெளலி எடுக்கவுள்ளதாகவும், அதற்கு 15 நாட்கள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. படத்தில் மிரட்டும் சண்டை காட்சிகளை போன்றே பாடலும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும். ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இப்படத்தில் அதுபாேன்ற ஒரு பாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSMB29 leak video Mahesh Babu SS Rajamouli

லீக்கான வீடியோ: SSMB29 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் மகேஷ் பாபு நடிக்கும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மகேஷ் பாபுவை கோபப்படுத்தும் வகையில் உருவாகும் சண்டை காட்சி இடம்பெற்றுள்ளது. மகேஷ் பாபுவை ஒருவர் பின்னிருந்து தள்ளிவிட்டு ஒருவர் காலில் விழ வைப்பது போன்று அந்த வீடியோவில் தெரிகிறது. மகேஷ் பாபு மண்டியிடுகிறார் காரில் இருக்கும் இருவர் ஏளனமாக பார்ப்பது போன்றும் உள்ளது. இதை பார்க்கையில் ஆர்ஆர்ஆர் படத்தை போன்று புரட்சியை ஏற்படுத்தும் படமாக இருக்கும் எனகூறப்படுகிறது. இதை பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

அப்செட்: ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பின் போதே ராஜமெளலி மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக செயல்பட்டு படத்தின் சிறு காட்சிகளை கூட லீக் ஆகாமல் பார்த்துகொண்டார். ஆனால், இதை யார் லீக் செய்தது. எப்படி வீடியோ எடுத்தார்கள் என படக்குழுவே அப்செட்டில் உள்ளதாம். மகேஷ் பாபு ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X