ஹீரோயின்களுக்கு போதைப் பொருள் சப்ளை விவகாரம்.. புகார் சொன்ன நடிகைக்கு எதிராக பிரபல இயக்குனர் வழக்கு
மும்பை: பிரபல நடிகைக்கு எதிராக பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட், அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணை
இந்தி திரையுலகைச் சேர்ந்த பலருக்கு போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது.

வருவது அறிந்து
இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை லுவீனா லோத், பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது கணவர் சுமித் சபர்வால் பற்றியும் மகேஷ் பட், அவர் சகோதரர் முகேஷ் பட் பற்றியும் பரபரப்பு புகார் கூறி இருந்தார். லுவீனாவின் கணவர் சுமித், மகேஷ் பட்டின் உறவினர்.

பெண்கள் புகைப்படங்கள்
அவர் கூறும்போது, சுமித் சபர்வால் நடிகர்கள், நடிகைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வருவது அறிந்து, விவாகரத்து கோரி இருக்கிறேன். நடிகைகள் அமைரா தஸ்தூர், சப்னா பாபி போன்றோருக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்தார். அவர் செல்போனில் பெண்கள் புகைப்படங்கள் அதிகமாக இருக்கிறது.

விரட்டப் பார்க்கிறார்
அவர் பெண்களையும் சப்ளை செய்கிறார். இந்தி சினிமாவில் மகேஷ் பட், டான். அவர் சொல்படி கேட்காவிட்டால், வேலை கிடைக்காமல் செய்துவிடுவார். அவர் மீது நான் புகார் தெரிவித்ததால், என்னை வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறார். எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ ஏதும் நடந்தால், அதற்கு மகேஷ் பட் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

அவதூறு வழக்கு
இது பரபரப்பானது. இயக்குனர் மகேஷ் பட் இதை மறுத்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் மகேஷ் பட், முகேஷ் பட் ஆகியோர், ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம், 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நடிகை லூவினா லோத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











