சுஷாந்த் சிங்கை இருமுறை தான் சந்தித்தேன்.. ரியாவை விட்டு விலக சொல்லவில்லை.. மகேஷ் பட் வாக்குமூலம்

மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜரான இயக்குநர் மகேஷ் பட், தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுஷாந்த் ரசிகர்களால் குற்றம் சாட்டப்படுபவர் மகேஷ் பட் தான்.

சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபோர்த்திக்கும், ஆலியா பட்டின் தந்தையான மகேஷ் பட்டுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சுஷாந்த் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

காவல் நிலையத்தில் ஆஜர்

காவல் நிலையத்தில் ஆஜர்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சைகளையும் நெப்போடிச பிரச்சனைகளையும் கிளறி உள்ளது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ரியா சக்கரபோர்த்தி, தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட பலர் விசாரிக்கப் பட்டு வரும் நிலையில், இயக்குநர் மகேஷ் பட்டின் வாக்குமூலம் திங்களன்று சாண்டா க்ரூஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

இருமுறை மட்டுமே

இருமுறை மட்டுமே

மகேஷ் பட் அளித்த வாக்குமூலம் குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது. அதில், மறைந்த நடிகர் சுஷாந்தை தனது வாழ்நாளில் இரு முறை மட்டுமே மகேஷ் பட் சந்தித்ததாகவும், 2018ம் ஆண்டு தனது புத்தகம் தொடர்பாகவும், 2020ம் ஆண்டில் சதாக் 2 படம் தொடர்பாகவும் சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.

ரியாவை விட்டு விலக

ரியாவை விட்டு விலக

மேலும், நடிகை ரியா சக்கரபோர்த்தியை விட்டு விலக சுஷாந்த் சிங்கிடம் தான் ஒரு போதும் கூறியதில்லை, என்றும், ரியா சக்கரபோர்த்தி தொடர்பாக வரும் செய்திகள் எதுவுமே ஆதாரமற்ற ஒன்று எனவும், அதனை தயவு செய்து நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார். விஷமிகள் வேண்டுமென்றே தேவையற்ற பல விஷயங்களை பரப்புவதாகவும் கூறியுள்ளார்.

நெப்போடிசத்துக்கு ஆதரவில்லை

நெப்போடிசத்துக்கு ஆதரவில்லை

மேலும், தான் ஒரு போதும் நெப்போடிசத்துக்கு ஆதரவாக இருந்தது இல்லை என்றும், பல புதுமுக நடிகர்களை தனது சினிமா வாழ்வில் அறிமுகப்படுத்தி உள்ளேன் என்றும் மும்பை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் நடிகை ஆலியா பட்டின் அப்பாவான மகேஷ் பட்.

சதாக் 2வில் சுஷாந்த் நீக்கம் ஏன்

சதாக் 2வில் சுஷாந்த் நீக்கம் ஏன்

மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள சதாக் 2 படத்தில் நடிக்க முதலில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை அணுகிய நிலையில், சில காரணங்களுக்காக அந்த கூட்டணி உறுதியாக வில்லை என்று கூறிய மகேஷ் பட், அந்த படத்தில் ரியாவை நாயகி ஆக போட வேண்டும் என சுஷாந்த் சிங் வைத்த கோரிக்கைக்காக தான் அவரை படத்தில் இருந்து வெளியேற்றியதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X