twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'துப்பாக்கி படத்தில் நான் நடித்திருந்தால்...' - 'ஸ்பைடர்' இசை வெளியீட்டில் மகேஷ்பாபு

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த 'துப்பாக்கி' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து 'ஸ்பைடர்' படத்தை இயக்கியிருக்கிறார்.

    மகேஷ் பாபு நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி இருக்கிறது 'ஸ்பைடர்'. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு, விஷால், சதீஷ் எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்கவில்லை.

    செம கூட்டணி :

    'ஸ்பைடர்' படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா மற்றும் பரத் ஆகியோர் நடித்திருக்கின்றனர். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    120 கோடி பட்ஜெட் :

    120 கோடி பட்ஜெட் :

    'ஸ்பைடர்' படம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடம் எனக் கூறப்பட்டுள்ளது.

    'ஒக்கடு'வைச் சிலாகித்த முருகதாஸ் :

    இந்த விழாவில் பேசிய முருகதாஸ், 'பத்து வருடங்களுக்கு முன் மகேஷ் பாபுவின் 'ஒக்கடு' படத்தைப் பார்த்தேன். 3 வாரங்கள் கடந்தும் தியேட்டர்களில் ஒரு திருவிழா போல இருந்தது.

    போக்கிரி :

    போக்கிரி :

    'போக்கிரி' படத்தில் மகேஷ் பாபு நடித்துக்கொண்டிருந்தபோது அவரை வைத்துப் படம் இயக்க விரும்பினேன். பிறகு 'துப்பாக்கி' படத்தை அவரை வைத்துத் தயாரித்து இயக்க வேண்டும் என்று திட்டம். ஆனால் அது இப்போது தான் நடந்திருக்கிறது' என்று கூறினார்.

    விஷால் :

    விஷால் :

    விழாவில் பேசிய நடிகர் விஷால் மகேஷ் பாபுவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்பதாகத் தெரிவித்தார். மேலும் இதுவரை சமூகப் பிரச்னைகள் பற்றி பல படங்கள் இயக்கியுள்ள முருகதாஸ், நீட் பற்றி ஒரு படம் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    பாலிவுட்டுக்குப் போயிடாதீங்க :

    பாலிவுட்டுக்குப் போயிடாதீங்க :

    'சார் தயவு செஞ்சு மீண்டும் பாலிவுட்டுக்கு போகாதீங்க... தற்போது நிலவும் பிரச்னை குறித்து படம் எடுங்க... நீங்க அதை ஏற்கெனவே ஐடியா பண்ணியிருப்பீங்க' என விஷால் கூறினார்.

    மகேஷ் பாபு :

    மகேஷ் பாபு :

    விழாவில் பேசிய மகேஷ் பாபு, '18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்குவது போல இருக்கிறது' என தமிழில் நடிப்பது குறித்துப் பேசினார்.

    மேலும், 'துப்பாக்கி' படத்தில் விஜய் சொன்ன 'ஐ யம் வெயிட்டிங்' என்ற பஞ்ச்லைன் தனது ஃபேவரிட்' என மகேஷ் பாபு கூறியுள்ளார். 'துப்பாக்கி' படத்தில் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனப் பல முறை யோசித்துள்ளேன் என மகேஷ் தெரிவித்தார்.

    English summary
    The audio launch of 'Spyder' was held yesterday in Chennai. Mahesh Babu, Vishal and Sathish were present at this event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X