»   »  நைட் கிளப்பில் கண்ட இடத்தில் தொட்டவனை ஓங்கி அறைந்த பிரபல நடிகை

நைட் கிளப்பில் கண்ட இடத்தில் தொட்டவனை ஓங்கி அறைந்த பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தொலைக்கட்சி தொடர்களில் நடித்து வரும் மாஹி விஜ் தனது கணவருடன் நைட் கிளப்புக்கு சென்ற இடத்தில் தன்னை கண்ட இடத்தில் தொட்டவனை ஓங்கி அறைந்துள்ளார்.

பாலிகா வது உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மாஹி விஜ். அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஜெய் பனுசாலியை திருமணம் செய்துள்ளார்.

நாச் பாலியே 5 டான்ஸ் போட்டியில் ஜெய்யுடன் சேர்ந்து ஆடி வெற்றி பெற்றவர் மாஹி.

நைட் கிளப்

நைட் கிளப்

மாஹி தனது கணவர் ஜெய் மற்றும் நண்பருடன் சேர்ந்து மும்பையில் உள்ள நைட் கிளப் ஒன்றுக்கு சென்றுள்ளார். கிளப்பில் கழிவறைக்கு சென்றுவிட்டு தனது இடத்திற்கு அவர் போயுள்ளார்.

சில்மிஷம்

சில்மிஷம்

கிளப்பில் நடந்து சென்ற மாஹியை யாரோ ஒருவர் கண்ட இடத்தில் தொட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மாஹி அந்த நபரை இரண்டு முறை ஓங்கி அறைந்துள்ளார்.

கணவர்

கணவர்

மாஹி தனது கணவரை அழைத்து வருவதற்குள் அந்த சில்மிஷ ஆசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனால் மாஹி இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை.

அடையாளம்

அடையாளம்

என்னிடம் தவறாக நடந்து கொண்ட நபரின் அடையாளம் தெரியவில்லை. அவரை பிடிப்பதற்குள் ஓடிவிட்டார். அதனால் போலீசார் புகார் கொடுக்க முடியவில்லை என்றார் மாஹி.

English summary
Popular television actress Mahhi Vij was molested at a night club in Mumbai. She slapped the person who groped her in the club.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil