மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம்.. சென்னையில் படப்பிடிப்பு தொடக்கம்!

By

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது.

முன் தினம் பார்த்தேனே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், மகிழ் திருமேனி.

கவுதம் வாசுதேவ் மேனனிடன் உதவி இயக்குனராக பணியாற்றிய மகிழ் திருமேனி, அடுத்து, அருண் விஜய்-க்கு திருப்பத்தைக் கொடுத்த தடையறத் தாக்க என்ற படத்தை இயக்கினார்.

ஹிட்டான தடம்

ஹிட்டான தடம்

இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்யா, ஹன்சிகா நடித்த மீகாமன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த தடம் படத்தை இயக்கினார். இந்தப் படம் ஹிட்டானது. இதன் புத்திசாலித்தனமான திரைக்கதையும் விறுவிறுப்பும் கவனிக்க வைத்தன.

கொரோனாவுக்கு முன்பே

கொரோனாவுக்கு முன்பே

இதையடுத்து அவர் விஜய் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அவர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. உதயநிதி நடிக்கும் படம் கொரோனாவுக்கு முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

அரோல் கரோலி இசை

அரோல் கரோலி இசை

தள்ளிப் போனது. இந்நிலையில் இதன் பூஜை சென்னையில் இன்று நடந்தது. படத்தில் உதயநிதி ஜோடியாக, நிதி அகர்வால் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அரோல் கரோலி இசை அமைக்கிறார். நவம்பர் 9-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

வில்லனாக நடிக்கிறார்

வில்லனாக நடிக்கிறார்

இதற்கிடையே இயக்குனர் மகிழ் திருமேனி, விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். டெடி படத்திலும் நடித்துள்ள இவர், இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு டப்பிங்கும் பேசியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X