twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாரும் உதவவில்லை..என் முகத்தில் மட்டும் 67 கண்ணாடி துண்டுகள்.. கோர விபத்தில் மீண்ட நடிகை பகீர்!

    By
    |

    மும்பை: அந்த கோர விபத்தில், தன் முகத்தில் 67 கண்ணாடித் துண்டுகள் குத்திக் கிழித்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Actress Challenge | Losliya, Simbran Tik Tok, Reba John, Athulya Ravi | Lock down diaries

    பிரபல இந்தி நடிகை மஹிமா சவுத்ரி. சுபாஷ் கய் இயக்கிய பர்தேஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர்.

    ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்தப் படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து தில் கியா கரே, கில்லாடி 420, லஜ்ஜா, தேரே நாம் உட்பட பல படங்களில் நடித்தார்.

    இரண்டு நாட்களுக்கு முன்பே எச்சரித்த எமன்.. லேசாக விட்ட சிரஞ்சீவி சர்ஜா.. உயிர்போன பரிதாபம்!இரண்டு நாட்களுக்கு முன்பே எச்சரித்த எமன்.. லேசாக விட்ட சிரஞ்சீவி சர்ஜா.. உயிர்போன பரிதாபம்!

    விவாகரத்து

    விவாகரத்து

    கடந்த 2006 ஆம் ஆண்டு பாபி முகர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்ட மஹிமாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற அவர், இப்போது தனியாக வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு இருபது வருடங்களுக்கு முன் நடந்த கோர விபத்து பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் அஜய் தேவ்கன்

    நடிகர் அஜய் தேவ்கன்

    1999 ஆம் ஆண்டு பிரகாஷ் ஜா இயக்கத்தில், உருவான இந்தி படம், தில் கியா கரே. அஜய் தேவ்கன், கஜோல் ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த மஹிமா, பயங்கரமான விபத்தில் சிக்கினார். லாரி ஒன்று அவர் காரில் வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். பெங்களூரில் நடந்த இந்த விபத்து பற்றி மஹிமா இப்போது கூறியிருப்பதாவது:

    மருத்துவமனை

    மருத்துவமனை

    அந்த விபத்தில் நான் இறந்து கொண்டிருப்பதாக நினைத்தேன். யாருமே உதவ வரவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பிறகு எப்படியோ அங்கு சேர்த்தனர். பிறகு என் அம்மா, மருத்துவமனைக்கு வந்தார். நடிகர் அஜய் தேவ்கனும் வந்தார். இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பெட்டில் இருந்த நான் திடீரென்று எழுந்தேன்.

    அதிர்ந்து விட்டேன்

    அதிர்ந்து விட்டேன்

    அருகில் இருந்த கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். என் முகத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள். அவர்கள், 67 கண்ணாடித் துண்டுகளை முகத்தில் இருந்து எடுத்திருந்தார்கள். இந்த விபத்து காரணமாக வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. சூரிய ஒளி முகத்தில் படக் கூடாது.

    தெரியக் கூடாது

    தெரியக் கூடாது

    கண்ணாடிப் பார்ப்பதையே தவிர்த்தேன். இனி யாராவது படங்களில் நடிக்க அழைப்பார்களா என்று பயந்தேன். ஆனால், அப்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி இருந்தேன். அதை விட்டுவிட வேண்டி இருந்தது. மக்களுக்கு இது தெரியக் கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் அப்போது மக்கள் ஆதரவாக இல்லை.

    அக்‌ஷய் குமார்

    அக்‌ஷய் குமார்

    இது தெரிந்தால் அவர் முகம் அவ்வளவுதான் என்று சொல்லி விடுவார்கள் என நினைத்தேன். பிறகு, பியார் கோய் கெல் நஹின் படத்தில் நடித்த போது சன்னி தியோலும், தட்கன் படத்தில் நடித்தபோது அக்‌ஷய்குமாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. நடித்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Mahima Chaudhry’s face was badly injured in a car accident in 1999. She recalls how it changed her life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X