"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்! - Exclusive

அண்ணனுக்கு ஜே பட இயக்குநர் ராஜ்குமார், நாயகி மஹிமாவைப் பாராட்டியுள்ளார்.

Recommended Video

டாவின்சி சொன்ன பேரழகி தான் மஹிமா...இயக்குனர் புகழாரம்- வீடியோ

சென்னை: டாவின்சி சொன்ன பேரழகி தான் மஹிமா என புகழாரம் சூட்டியுள்ளார் 'அண்ணணுக்கு ஜே' படத்தின் இயக்குனர் ராஜ்குமார்.

அட்டக்கத்தி தினேஷ், மஹிமா நம்பியார் நடிக்கும் படம் அண்ணணுக்கு ஜே. சமகால அரசியலை நையாண்டி செய்யும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க, அவரிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்த பல்வேறு தகவல்களை ஒன்இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் ராஜ்குமார். அப்போது அவர், பல்துறை வித்தகர் லியோனார்டோ டாவின்சி கோடிட்டு காட்டிய பேரழகி மஹிமா தான் என்றார்.

அரசியல் நையாண்டி படம்:

அரசியல் நையாண்டி படம்:

மேலும் அவர் கூறியதாவது, " அண்ணணுக்கு ஜே திரைப்படம் சமகால அரசியலை நையாண்டி செய்யும் படமாக இருக்கும். இந்த வகை திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அரிதானது. சோவின் துக்ளக் தர்பார் படம் என் படத்துக்கான இன்ஸ்பிரேஷன்.

அரசியல் பொதுவானது:

அரசியல் பொதுவானது:

இந்த படத்தை பத்து ஆண்டுகள் கழித்தும் கூட நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடியும். தனிப்பட்ட நபர்களையோ, சம்பவங்களையோ நையாண்டி செய்யாமல், நம் அரசியல் அமைப்பை கேலி செய்யும் படமாக இது இருக்கும். அரசியல் என்பது கட்சிகளுக்கு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்கள் உட்பட எல்லா இடங்களிலும் இருக்கக் கூடியது தான்.

தினேஷின் அர்ப்பணிப்பு:

தினேஷின் அர்ப்பணிப்பு:

இந்த படத்தில் நாயகன் தினேஷ் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். ஒரு காட்சியில் அவர் பனை மரம் ஏற வேண்டும். அதற்காக கடுமையாக பயிற்சி செய்து, பலமுறை மரம் ஏறி இறங்கி அசத்தினார். தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நடிகர்களில் தினேஷ் மிகவும் எனர்ஜி உடையவர்.

பிடிவாதக்கார பெண்கள்:

பிடிவாதக்கார பெண்கள்:

மஹிமா நம்பியாருக்கு இந்த படத்தில் சூப்பரான ஒரு ரோல். நம் எல்லோர் வீட்டிலும் பிடிவாதக்கார பெண்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் என் படத்தின் நாயகி சுந்தரி.

பேரழகி:

பேரழகி:

இந்த படத்திற்குள் மஹிமா வந்ததே பெரிய கதை. நாங்கள் நிறைய நடிகைகளை ஆடிசன் செய்தோம். ஆனால் யாரையும் தேர்வு செய்ய முடியவில்லை. ஒருநாள் மஹிமாவை பார்த்தவுடன் தோணியது, இவர் தான் என் படத்தின் சுந்தரி என்று. ஏனென்றால் பல்துறை வித்தகர் லியோனார்டோ டாவின்சி கோடிட்டு காட்டிய கோல்டன் ரேஷியோ முகம் மஹிமாவுக்கு. பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடிக்கும் பேரழகி அவர், " என இயக்குனர் ராஜ்குமார் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X