பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்!
சென்னை : தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் பிரபல நடிகை ஒருவர் தனது க்யூட்டான சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான அசுரகுரு திரைப்படத்தை தொடர்ந்து மஹிமா நம்பியார் இப்பொழுது மலையாளத்தில் ஆசிப் அலியுடன் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளம் மற்றும் தமிழ் என பல திரைப்படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மஹிமா நம்பியார் வெளியிட்டுள்ள இந்த க்யூட்டான புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

காரியஸ்தன்
கொள்ளை கொள்ளும் அழகு அலட்டிக் கொள்ளாத நடிப்பு என தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் மஹிமா நம்பியார் மலையாளத்தில் வெளியான "காரியஸ்தன்" என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து இப்பொழுது தமிழ் திரைப்படங்களும் நடித்து பெரும் ரசிகர்களை கொண்டு உள்ளார்.

சுமாரான வெற்றி
சாட்டை, கொடிவீரன், மகாமுனி என இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் பெயர் சொல்லும் வகையில் அனைவரையும் ஈர்த்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான "அசுரகுரு" திரைப்படம் இவருக்கு சுமாரான வெற்றியைப் பெற்று தந்தது.

சமீபத்தில் வெளியாகி
விக்ரம் பிரபுவின் ராட்சத நடிப்பில் உருவாகியிருந்த "அசுரகுரு " பல ஆண்டுகளாக வெளியாகும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது.

அசத்தி வருகிறார்
இவ்வாறு தமிழ் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து கலக்கி வரும் மஹிமா நம்பியார் அதேசமயம் மலையாளத் திரைப்படங்களிலும் அசத்தி வருகிறார்.

ஒப்பந்தமாகியுள்ளார்
மம்முட்டி மற்றும் ஜெய் முதல்முறையாக இணைந்து நடித்த "மதுர ராஜா " என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இப்போது நடிகர் ஆசிப் அலி நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
Recommended Video

ட்ரெண்டாகி வருகிறது
இயக்குனர் எம்.பத்மகுமார் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில் இத்திரைப்படம் மிக விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மஹிமா நம்பியார் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

பாராட்டு மழையில்
பிங்க் கலர் டிரஸ்ஸில் அனைவரையும் கொள்ளை கொள்ளும் க்யூட்டான சிரிப்புடன் உள்ள சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள மஹிமா நம்பியார் இப்பொழுது ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











