தூங்கும் போது இயக்குநர் செய்த வேலை.. மிகப்பெரிய அசிங்கம்.. கடுப்பான மஹிமா நம்பியார்!
சென்னை: படப்பிடிப்பின் போது இயக்குநர் பார்த்த வேலையால் நடிகை மஹிமா நம்பியார் ஏகத்திற்கும் டென்ஷனாகி உள்ளார்.
நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் சில படங்களில் நடித்ததையடுத்து தமிழில் சாட்டை என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அவரது மாணவியாக நடித்திருந்தார்.
இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.

நடிகை மஹிமா நம்பியார்: சாட்டை படத்தின் வெற்றியை அடுத்து புரியாத புதில், கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஆர்யாவுடன் மகாமுனி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச விருதையும் பெற்றுத்தந்தது.
800 படத்தில்: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக மாறி உள்ள இவர்,சந்திரமுகி 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல, முன்னாள் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பயோபிக் 800 என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில், மதி மலர் ஜீயின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
நடிகை தூங்கும் போது: இந்நிலையில், நடிகை மஹிமா நம்பியார், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படபிடிப்பு முடிந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, பயணத்தில் மஹிமா நம்பியார் வாயை பிளந்துக்கொண்டு தூங்கி உள்ளார். இதைப்பார்த்த இயக்குநர், சி.எஸ்.அமுதன் அதை அப்படியே வீடியோவாக எடுத்து படக்குழுவினருக்கு ஷேர் செய்துள்ளார்.
இயக்குநர் செய்ற வேலையா இது: இந்த வீடியோவைப் பார்த்த நடிகை மஹிமா நம்பியார், இது மிகப்பெரிய அசிங்கம் என்று செல்லமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் இணையவாசிகள், ஒரு பெண் தூங்கிக் கொண்டு இருக்கும் போது, இப்படியா வீடியோ எடுப்பீங்க, இதெல்லாம் ரொம்ப தப்பு என்று இயக்குநரை திட்டிதீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











