தம்மடிக்கணுமா.. நான் ரெடி.. மஹிமாவின் தில்லைப் பாருங்க!

சென்னை : அசுரகுரு படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் மஹிமா நடித்துள்ளார்.

நடிகை மஹிமா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகி இவர் துணிச்சல் மிகுந்த கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதே நேரத்தில் இவரின் அசுரகுரு படம் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார், யோகிபாபு, மனோபாலா, சுப்புராஜு நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கி இருக்கிறார் ஏ.ராஜ்தீப் ஜே.எஸ்.பி சதீஷ் படத்தை தயாரித்து இருக்கிறார் .

 அசுர குரு

அசுர குரு

இந்த படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த அனைவரும் படத்தில் மஹிமா கதாபாத்திரம் சூப்பர் என்றும் மஹிமா சிறப்பாக நடித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்கள். மஹிமா தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திலும் ஒரு டிடக்டிவ்வாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாறுபட்ட உடை மாறுபட்ட லுக்கிலே படம் முழுக்க நடித்து அசத்தியிருக்கிறார் .

தம்மு

தம்மு

இதை தாண்டி இந்த படத்தில் மஹிமாவிற்கு புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கிறது. மஹிமா இயக்குனரின் கதாபாத்திர அமைப்பை சரியாக புரிந்து கொண்டு கதைக்கு இது தேவை என்பதற்காக புகைப்பிடித்து இருக்கிறாராம். இயல்பில் புகைப்பிடிக்காத மஹிகா கதாபாத்திரத்திற்காக துணிச்சலான இந்த முடிவை எடுத்திருக்கிறார் .

 ரொம்ப தைரியம்தான்

ரொம்ப தைரியம்தான்

புகைப்பிடிக்கும் காட்சிகளை படங்களில் தவிர்க்குமாறு சமூக நல ஆர்வலர்களும் தணிக்கைகுழுவும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில். பல படங்களில் அது குறைந்திருந்தாலும் சில படங்களில் அதிகபடியாகவே காட்ட படுகிறது அதற்கு படைப்பாளிகள் கூறுவது சில இடங்களில் புகைப்பிடித்தல் இல்லாமல் எடுப்பதும் கடினமாகும் ஏனெனில் அது கதையின் உண்மை தன்மையை கெடுத்து விடும். இதனால் படத்தில் மஹிமா புகைப்பிடிக்கும் காட்சிகளில் மற்ற படங்களை போல இந்த படத்திலும் விழிப்புணர்வு வார்த்தைகள் திரையில் காண்பிக்கபடுகின்றன .

கிட்னா

கிட்னா

இதை அனைத்தையும் தாண்டி புகைப்பிடிக்கும் காட்சிகள் குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை வரும் காலங்களில் தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக மஹிமா சமுத்திரகனி இயக்கும் கிட்னா படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது முதல் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X