அடித்து கொடுமைப்படுத்தினார், சம்பளம் கொடுக்கவில்லை: நடிகை மீது பணிப்பெண் போலீசில் புகார்
மும்பை: பாலிவுட் நடிகை கிம் ஷர்மா தன்னை அடித்து நொறுக்கியதுடன் சம்பளமும் கொடுக்கவில்லை என்று பணிப்பெண் எஸ்தர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கென்யாவில் தொழில் அதிபராக இருக்கும் கணவர் அலியை பிரிந்த பிறகு நாடு திரும்பிய பாலிவுட் நடிகை கிம் ஷர்மா மும்பையில் வசித்து வருகிறார். செலவுக்கு கூட காசு இல்லாமல் அவர் கஷ்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.
எனக்கு நிதி பிரச்சனை எல்லாம் இல்லை என்று விளக்கம் அளித்தார் கிம்.

போலீஸ்
கிம் ஷர்மா வீட்டில் வேலை செய்து வந்த எஸ்தர் என்ற பெண் காவல் நிலையத்திற்கு சென்று தனது எஜமானி மீது புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளித்தது குறித்து மீடியாவிடம் தெரிவித்துள்ளார் எஸ்தர்.

துணி
துணி துவைத்தபோது கருப்பு நிற உடை கலர் போய் அது வெள்ளை நிற டி-சர்ட் மீது பட்டுவிட்டது. இதை பார்த்து என் தவறை உணர்ந்த நான் கிம் ஷர்மாவிடம் உடனே தெரிவித்தேன். அவர் என்னை வீட்டை விட்டு வெளியே போகுமாறு பிடித்து தள்ளியதுடன், அசிங்கமாக திட்டினார் என்றார் எஸ்தர்.

சம்பளம்
கிம் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், சம்பளம் கொடுக்கவில்லை என்றும் எஸ்தர் புகார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் கிம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒப்பந்தம்
ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள ஆடையை பாழாக்கிவிட்டார் எஸ்தர். அந்த கோபத்தில் அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன். ஆனால் அவரை நான் அடித்தது இல்லை. ஜூலை 7ம் தேதி சம்பளம் தருவதாக ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தேன் என்று கிம் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபலங்கள்
பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை கொடுமைப்படுத்துவதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கிம் பணிப்பெண்ணை கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











