ஐஸ்வர்யா வீட்டில் 4 ஆண்டுகளாக சிறுக சிறுக நகையை திருடிய பெண்.. வசமாக சிக்கியது எப்படி?
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடு போன விவகாரம் தான் கடந்த சில நாட்களாக இணையத்திலும், ஊடகங்களிலும் பேசு பொருளாகவே உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருதினங்களுக்கு முன் வீட்டு லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் திருடுபோய் விட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றர். இதில் அந்த பெண் நகையை திருடியது எப்படி என போலீசார் விளக்கமாக கூறியுள்ளனர்.

நகை திருட்டு
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திங்கட்கிழமை அன்று வீட்டு லாக்கரில் இருந்த, ஆரம், நெக்லஸ், கம்மல், வளையல், நவரத்தினம், வைரம் என 60 சவரன் மதிப்பு நகையை காணவில்லை. அந்த நகைகளை கடைசியாக நான் கடைசியாக தனது தங்கை செளந்தர்யாவின் திருமணத்தின் போது பயன்படுத்திவிட்டு லாக்கரில் வைத்துவிட்டேன்.

பணியாளர் மீது சந்தேகம்
அதன்பிறகு மூன்று முறை வீடு மாற்றிவிட்டேன், ஆனால், அந்த லாக்கரை நான் திறந்து பார்க்கவில்லை. கடந்த பிப்ரவரி 10ந் தேதி லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. லாக்கரில் நகைகள் இருப்பது குறித்து வீட்டில் பணிபுரியும் 3 பணியாளர்களுக்கு தெரியும், இதனால், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.

போலீசார் விசாரணை
இதையடுத்து போலீசார் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவர்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். இதில் பெண் பணியாளர் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளதை கண்டுபிடித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நகையை சிறுக சிறுக நான்கு ஆண்டுகளாக திருடியது குறித்து போலீசார் தெளிவாக கூறியுள்ளனர்.

கொஞ்சம் கொஞ்சமாக நகை திருடினார்
ஐஸ்வர்யா வீட்டில் நீண்டகாலமாக ஈஸ்வரி பணியாற்றி உள்ளதால், அவருக்கு லாக்கர் சாவி வைக்கும் இடம் நன்றாக தெரிந்து இருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும்போதெல்லாம் அவர் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடிவந்திருக்கிறார். அது யாருக்கும் தெரியாததால், நகைகளை திருடுவதை தொடர்ந்து செய்துள்ளார்.

வசமாக சிக்கிய பணிப்பெண்
திருடிய நகைகளை விற்ற பணத்தை வைத்து, ஈஸ்வரி சோழிங்நல்லூரில் 95 லட்சத்தில் வீடு ஒன்றை வாங்கி, அந்த வங்கிக் கடனையும் குறுகிய காலத்தியேலே அடைத்து இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் வேலையிலிருந்து நிற்பதாகத் தெரிவித்திருக்கிறார். வங்கி பரிவர்த்தனை வைத்துத்தான் ஈஸ்வரி வசமாக சிக்கினார் என்றும், அவரது கணவர் அங்கமுத்துவும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.


Click it and Unblock the Notifications











