twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகையான ரகசியம் சொன்ன 'புன்னகைப் பூ' கீதா

    By Mayura Akilan
    |

    சென்னை: திரைக்குப் பின்னால் தயாரிப்பாளராக இருந்த தன்னையும் நடிகையாக்கிவிட்டனர். என்னுடைய நடிப்புப் பயணம் தொடங்கிவிட்டது என்று புன்னகைப் பூ கீதா கூறியுள்ளார்.

    மைந்தன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதனைக்கூறியுள்ளார்.

    மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனம் மலாய், சீன மொழிகளில் படங்களை தயாரித்து வந்தது .

    அடுத்து தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கி 'அப்பளம்' படத்தை முதலில் தயாரித்தது. இது வணிக வெற்றியையும் பல விருதுகளையும் பெற, இரண்டாவது படமாக சி.குமரேசன் என்ற மலேசிய தமிழ் நடிகர் நாயகனாக நடித்து இயக்க மைந்தன் என்ற படத்தை தயாரித்துள்ளது

    இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அவ்விழாவில் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், சமுத்திரகனி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இயக்குநருக்கு பாராட்டு

    இயக்குநருக்கு பாராட்டு

    இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், இந்த படத்தின் ஹீரோ அவர் சிறுவயதாக இருந்தபோது நான் கமலை வைத்து இயக்கிய சகலகலா வல்லவன், ரஜினியை இயக்கிய முரட்டுக்காளை போன்ற படங்களை பார்த்தே தன்னை வளர்த்துக்கொண்டதாக சொன்னார்.

    தமிழ் பேசும் நாயகிகள்

    தமிழ் பேசும் நாயகிகள்

    அப்படியென்றால் நாளைக்கு அவரும் ஒரு ரஜினி மாதிரியோ, கமல் மாதிரியோ பெரிய நடிகராக வரவாய்ப்பிருக்கிறது. அதோடு, இந்த படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள புன்னகை பூ கீதா அழகான தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

    தமிழ் பேச தயக்கம் ஏன்

    தமிழ் பேச தயக்கம் ஏன்

    இன்றைக்கு சினிமாவில் நடிக்கும் எந்த நடிகைகளுக்கும் தமிழ் தெரியவில்லை. அப்படியே ஓரளவு தெரிந்தாலும் அவர்கள் தமிழில் பேசுவதில்லை. ஆனால், கீதா ஒரு ஆங்கில வார்த்தைகூட கலக்காமல் சுத்த தமிழில் பேசினார்.

    டத்தோ சாமுவேல் மருமகள்

    டத்தோ சாமுவேல் மருமகள்

    அதேபோல் இதே படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஷைலுவும் மலேசிய தமிழ் பெண்தான். டத்தோ சாமுவேலின் மருமகள். ஆக, இதுவரை தமிழ்ப்படங்களின் ஆடியோ விழாக்களை மலேசியாவில் நடத்தியது போன்று, அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதனால், இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்றார்.

    நடிகையின் வாக்குமூலம்

    நடிகையின் வாக்குமூலம்

    அதையடுத்து புன்னகை பூ கீதா பேசும்போது, சினிமாவில் நான் பல படங்களை தயாரித்தபோதும், அப்போதெல்லாம் எனக்கு நடிக்க வேண்டுமென்ற ஆசை வரவில்லை. திரைக்கு பின்னாடியே இருந்து வந்தேன். ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் மட்டும் முகம் காட்டினேன்.

    துரத்திய இயக்குநர்

    துரத்திய இயக்குநர்

    மைந்தன் படத்தை இயக்கிய நாயகனாக நடித்துள்ள மலேசிய தமிழ் நடிகரான குமரேசன், என்னை ஹீரோயினாக நடிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன். இருப்பினும் என்னை விடாமல் துரத்திய அவர், அந்த கதையையும், எனக்குரிய கேரக்டரையும் சொன்னபோது இம்ப்ரஸ் ஆகி விட்டேன்.

    கதாநாயகியான புன்னகைப்பூ

    கதாநாயகியான புன்னகைப்பூ

    அதன்பிறகுதான் கதாநாயகியாக கேமரா முன்பு வந்தேன். ஆக நடிப்பு என்றாலே விழுந்தடித்து ஓடும் என்னை இப்போது நடிகையாக்கி விட்டனர்.

    ரத்தக்காயத்தோடு நடித்தேன்

    ரத்தக்காயத்தோடு நடித்தேன்

    அந்த வகையில், மைந்தன் படத்தில் நடித்தபோது கீழே விழுந்து ரத்தக்காயமெல்லாம் பட்டிருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்டு நடித்தாலும் இஷ்டப்பட்டு நடித்ததால் என் நடிப்பு நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் பாராட்டுகிறார்கள்.

    விமல் படத்தில் வாய்ப்பு

    விமல் படத்தில் வாய்ப்பு

    அதைப்பார்த்து இப்போது விமல் நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவேடா படத்திலும் நடிக்க வைத்து விட்டனர். ஆக, நானே எதிர்பார்க்காத வகையில் என் நடிப்பு கேரியர் ஸ்டார்ட்டாகி விட்டது. என்றாலும், என்னை அதிகமாக பாதிக்கும் கதைகளில் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் கீதா.

    நன்றி சொன்ன சமுத்திரகனி

    நன்றி சொன்ன சமுத்திரகனி

    இயக்குநர் சமுத்திரக்கனி பேசும் போது "முதல் இரண்டு படங்கள் சரியாகப் போகாததால் சிரமப்பட்டேன். திக்குத் தெரியாமல் திசைமாறி தவித்துக் கொண்டிருந்த போது. எனக்கு சரியான திசை காட்டியவர் ராஜாமணி அவர்கள். அவர் அறிமுகப் படுத்தியவர்தான் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அவர் கொடுத்த வாய்ப்புதான் ‘நாடோடிகள்' இப்படி என் வாழ்க்கையையே திசைமாற்றியவர் ராஜாமணி.கலைதான் உலகை இணைக்கும். அவர்களது படம் நிச்சயம் உலகில் சிதறிக் கிடக்கும் தமிழர்களை இணைக்கும். உலகத் தமிழர்களிடம் போய்ச் சேரும் என்றார்.

    100 சதவிகித மலேசிய தமிழர்கள்

    100 சதவிகித மலேசிய தமிழர்கள்

    படத்தை தயாரித்துள்ள ஆஸ்ட்ரோ நிறுவன நிர்வாகத் துணைத்தலைவர் ராஜாமணி பேசும், தமிழில் ‘அப்பளம்' முதல்படம். இரண்டாவது படம் ‘மைந்தன்' . இப்படத்தில் 100% மலேசிய தமிழர்கள்,மலேசிய இந்தியர்கள்தான் பங்கு பெற்று இருக்கிறார்கள்.

    தமிழ் படங்கள் தயாரிப்பில்

    தமிழ் படங்கள் தயாரிப்பில்

    நாங்கள் தமிழ்த்திரையுலகுடன் இணைந்து படங்கள் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறோம்.'மைந்தன்' படம் இதற்கு ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். தமிழ்த் திரையுலகம் ஒரு மாற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. இச்சூழலில் இருவரும் இணைந்தால் வெற்றி பெற முடியும்."என்றார்.

    ஆகஸ்ட் 7ல் ரிலீஸ்

    ஆகஸ்ட் 7ல் ரிலீஸ்

    மைந்தன் திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிடப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Maindhan Movie audio launch that took place on the 4th July 2014. Maindhan movie will be in cinemas nationwide on the 7th August 2014
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X