அத்தனை கோடி செலவு பண்ணியும் இதை ஒண்ணும் பண்ண முடியலையே... - '2.O' குழப்பங்கள்!

By Vignesh Selvaraj

Recommended Video

2.O : அத்தனை கோடி செலவு பண்ணியும் இதை ஒண்ணும் பண்ண முடியலையே...வீடியோ

துபாய் : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.ஓ' படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்பும் பின்பும் ஒருங்கிணைப்புச் சிக்கல்களால் பல குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. எதிர்பார்ப்பு மிகுந்த படத்திற்கான ஏற்பாட்டை இப்படி கவனமின்றியா நடத்துவது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்த '2.ஓ' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினர் லைவ்வாக '2.ஓ' பாடலுக்கு இசைத்தனர்.

பல முன்னணி திரையுலகினர் பங்குபெற்ற இந்த விழாவில் சரியாக ஒருங்கிணைக்கப்படாமல் பல குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. ப்ரொமோஷனுக்கு மட்டும் இவ்வளவு செலவு செய்த லைகா நிறுவனம் இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஹாலிவுட் லெவல்

ஹாலிவுட் லெவல்

ஒரு இந்தியப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் கொண்டு போய் நடத்தினால் அது உலகப் படமாகிவிடுமா என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது. தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் '2.0' படத்தின் இசை வெளியீட்டை இந்திய நகரங்களிலேயே நடத்தியிருக்கலாமே, இங்கே இடமா இல்லை என்றும் பலர் கேட்டு வருகிறார்கள்.

 ரொம்ம்ம்ப லேட்டு

ரொம்ம்ம்ப லேட்டு

'2.0' இசை வெளியீடு பற்றிய தகவல்கள் இன்றைய சமூக வலைதள உலகில் சரியான விதத்தில் பரிமாறப்படவில்லை. துபாய் நேரப்படி ஆறு மணிக்கும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாவதாகச் சொன்னார்கள். ஆனால், பல மணி நேர தாமதத்திற்குப் பிறகே இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது.

ஆடியோ ரிலீஸில் ஆடியோ ப்ராப்ளம்

ஆடியோ ரிலீஸில் ஆடியோ ப்ராப்ளம்

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் தங்களது இருக்கையில் வந்தமர்ந்ததும், ஆடியோவில் சிக்கல் இருப்பதாகச் சொல்லி சில நிமிடங்கள் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்திருந்தார்கள். பிரமாண்டமான நிகழ்ச்சியில் முன்னோட்டத்தின் போதே இவற்றையெல்லாம் சரிசெய்யாமல் விட்டது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

தகவல் பரிமாற்றம் இல்லை

தகவல் பரிமாற்றம் இல்லை

'2.0' படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் மிகக்குறைந்த அளவில் ஒரு சில தகவல் பரிமாற்றமே நடந்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமான விழா, அதிகாலை 2 மணி அளவில் இசை வெளியீட்டு நிகழ்வுடன் முடிவுற்றதாகத் தெரிகிறது. விழா முடிவடைந்து 10 மணி நேரமாகியும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

செலவு மட்டும் பல கோடி

செலவு மட்டும் பல கோடி

பல கோடி ரூபாய் செலவில் செவன் ஸ்டார் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு, 10,000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங், பிரம்மாண்ட இசை விழா என அதிகாரப்பூர்வமாக '2.0' படத்தின் இசையை வெளியிட்டார்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே பல இணையதளங்களில் '2.0' படத்தின் பாடல்கள் 'லீக்' ஆனதுதான் அவலத்தின் உச்சகட்டம்.

பைரசியை தடுக்க முடியவில்லை

பைரசியை தடுக்க முடியவில்லை

அவ்வளவு செலவு செய்து ஹாலிவுட் லெவல் படம் என்று சொன்னவர்கள் இந்த இணையத்திருட்டைத் தடுத்து நிறுத்தத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் விட்டுவிட்டார்கள். இந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் கேட்டு வருகிறார்கள். ரசிகர்கள் பலர் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கு '2.O' படக்குழுவினர்தான் விளக்கம் அளிப்பார்களா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X