மார்ச் 28ம் தேதி வெளியாகவுள்ள மேஜர் படத்தின் டீசர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: 2008 ஆம் ஆண்டு 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் என்எஸ்ஜி கமாண்டோ சந்தீப் உன்னிகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார்.
தற்போது அவரது வாழ்க்கையை மையமாக வைத்து "மேஜர்" என்ற தலைப்பில் படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ஆதிவி சேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் மகேஷ் பாபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

நாடு முழுவதும்
26/11 இன் ஹீரோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையை கொண்டாடும் ஆதிவி சேஷ் அவரின் பிறந்தநாளில் தியாகிக்கு அஞ்சலி செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும், மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பிறந்தநாளன்று நாடு முழுவதும் உள்ள மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவரது வீரச் செயல்களையும் நினைவில் கொள்கின்றனர்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு
சாயி மஞ்சரேக்கர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த 'தபாங் 3' படத்தில் நடித்து பிரபலமானார்.இந்தப் படத்தில் நடிப்பதற்காக படக்குழு நடிகை சாய் மஞ்ச்ரேகரை தேர்வு செய்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது. இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு
பின்னர் கடந்த 15ம் தேதி அதாவது மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு மேஜர் படக்குழு படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மெருகேற்றியுள்ளது. ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலக பிரபலங்களும் நல்ல ஆதரவை கொடுத்துள்ளனர்.

ரிலீஸ் தேதி
படத்தின் முன்னோட்ட காட்சி மட்டுமன்றி அத்துடன் சேர்த்து படத்தின் டீசர் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 28 அன்று அதிகாரப்பூர்வமாக டீசரை வெளியிடவுள்ள படக்குழு வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











