வற்புறுத்திய மாமனார் வரதராஜன்.. நோ சொன்ன இந்து ரெபெக்கா வர்கிஸ்.. என்ன நடந்தது?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தின் வசூல் கடந்த இரு தினங்களில் சிறப்பாக அமைந்துள்ளது. முதல் நாளிலேயே 42,3 கோடி ரூபாய்களை இந்தப் படம் வசூலித்துள்ளது.
தொடர்ந்து படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முகுத்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபெக்கா வர்கீஸ் என நிஜ கேரக்டர்களை சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் பிரதிபலித்துள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனும் படத்தின் வெற்றிக்கு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் தீபாவளியை ஒட்டி நேற்று முன்தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. விஜய்யின் கோட் படம், ரஜினிகாந்த் வேட்டையன் படம் இவற்றின் முதல் நாள் கலெக்ஷனை அமரன் படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே 42.3 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் இந்தப் படம் வசூலித்துள்ளதாக அமரன் டீம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபெக்கா வர்கீஸ் கேரக்டர்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன்: இந்த படத்தில் சிவகார்த்திகேயனை தன்னுடைய நடிப்பால் ஓவர்டேக் செய்துள்ளார் சாய் பல்லவி. இந்துவாக அவர் நிஜமாகவே வாழ்ந்துள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் மிகப் பெரிய கவனத்தை பெற்று வருகிறார் சாய் பல்லவி. அந்த வகையில் நிஜ வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமரன் படத்திலும் அவர் மிகச்சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். அவரது அழகு, நடிப்பு என அனைத்தும் அமரன் படத்தின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இணையான பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறார் சாய் பல்லவி.
மருமகளை பாராட்டிய முகுந்தின் அப்பா: இந்த படத்தின் நிஜக் கேரக்டரான முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபெக்கா வர்கிஸ் ஆகியோரின் காதல் கதை மற்றும் திருமண வாழ்க்கை ஆகியவையும் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளன. இந்நிலையில் முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் தற்போது தனது பேட்டி ஒன்றில் தனது மகன் உயிரிழந்த போது தனது மருமகளுக்கு 31 வயதே ஆனதாகவும் அதனால் அவரிடமும் அவரது அப்பாவிடமும் இந்துவின் மறுமணம் குறித்து தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னிடம் வந்து பேசிய இந்து, தான் மறுமணம் செய்து கொள்வேன் என்று நினைத்தீர்களா அப்பா என்று கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான காதல்: அமரன் படத்தின் மூலம் முகுந்த் மற்றும் இந்துவின் உண்மையான காதலை புரிந்து கொள்ள முடிகிறது அந்த காதலே இந்துவை இப்படி பதிலளிக்க வைத்துள்ளது. முகுந்த் வரதராஜன் கடந்த 2009ம் ஆண்டில்தான் இந்துவை திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து முகுந்த் மரணமடைந்தபோது அவரது மகளுக்கு 3 வயதே ஆகியிருந்தது. இவருக்கு இந்திய அரசு சார்ப்பில் உயரிய விருதான அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து இந்த விருதை பெற்ற நான்காவது நபர் முகுந்த் வரதராஜன்.


Click it and Unblock the Notifications











