twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராணுவ வீரர்களை இழிவுப்படுத்திய வெப்சீரிஸ்.. ஏக்தா கபூர் மீது மேலும் ஒரு வழக்கு.. குவிகிறது கண்டனம்!

    |

    மும்பை: ஆல்ட் பாலாஜி நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

    ALT Balaji தயாரிப்பில் ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் டிரிபிள் எக்ஸ் சீசன் 2 வெப்சீரிஸில் இந்திய ராணுவ வீரர்களை அவமதித்ததாக சமீபத்தில் ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.

    ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர் இந்துஸ்தானி பாவ் என்பவர் ஏக்தா கபூர் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், மேஜர் டி.சி. ராவ் தற்போது மேலும் ஒரு வழக்கை தொடர்ந்துள்ளார்.

    இதன்முன் ஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இமேஜஸ்!இதன்முன் ஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இமேஜஸ்!

    அத்துமீறும் வெப்சீரிஸ்கள்

    அத்துமீறும் வெப்சீரிஸ்கள்

    சீக்கிரத்திலேயே சம்பாதிக்க ஏகத்துக்கும் ஆபாச காட்சிகளையும், நிர்வாண காட்சிகளையும் வைத்து அதிக அளவிலான வெப்சீரிஸ்களை ஆல்ட் பாலாஜி, உல்லு உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. நெட்பிளிக்ஸுக்கு போட்டியாக இங்கேயும் நிர்வாணமாக நடிக்க நடிகர்களும் தாராளம் காட்டி வருவதை வெப்சீரிஸ் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டு அத்து மீறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

    பூராமே 18+

    பூராமே 18+

    எம்.எக்ஸ் பிளேயர், ஜி5, அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் என அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களும் அந்த மாதிரியான வெப்சீரிஸ்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றன. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அந்த வெப்சீரிஸ்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளுடனும், உடலுறவு காட்சிகளுடனும் பூராமே 18+ தொடர்களாகவே இருந்து இளைஞர்களை கெடுத்து வருகின்றன.

    எதிர்மறை கருத்துக்கள்

    எதிர்மறை கருத்துக்கள்

    ஆபாச காட்சிகளை தாண்டி தற்போது சர்ச்சையை கிளப்பும் மத ரீதியிலான காட்சிகளையும், ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளையும், ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன் என அடுத்த கட்டத்திற்கு வெப்சீரிஸ்கள் சென்சார் இல்லாத காரணத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதன் மூலம் இளைஞர்களுக்கு எதிர்மறை கருத்துக்களே உருவாகி வருவதாக லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    ஏக்தா கபூர் மீது வழக்கு

    ஏக்தா கபூர் மீது வழக்கு

    கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'XXX 2' வெப்சீரிஸில் கணவரின் ராணுவ உடையை கள்ளக் காதலனுக்கு அணிவித்து, அதனை கிழித்து செக்ஸ் கொள்ளும் ஒரு அபத்தமான காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த லாக்டவுனில் அந்த வெப்சீரிஸை பார்த்த பலரும், தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில், இந்தி பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட இந்துஸ்தானி பாவ் என்பவர் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    கண்டனம்

    கண்டனம்

    இந்துஸ்தானி பாவ் வழக்கு தொடர்ந்த நிலையில், பாலிவுட் ரசிகர்கள் ஒன்று திரண்டு #ALTBalaji_Insults_Army என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வெப்சீரிஸ்களுக்கு எதிரான தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். ‘Code M', Pataal Lok, Raktaanchal உள்ளிட்ட பல வெப்சீரிஸ்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

    காட்மேன் வெப்சீரிஸுக்கு தடை

    காட்மேன் வெப்சீரிஸுக்கு தடை

    பாலிவுட்டில் ஒளிபரப்பான வெப்சீரிஸுக்கு தடை வேண்டும் என குரல் எழுந்த நிலையில், தமிழில் வரும் ஜூன் 12ம் தேதி வெளியாக உள்ள காட்மேன் வெப்சீரிஸுக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்து தற்போது, அந்த வெப்சீரிஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அதன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    Recommended Video

    God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram
    2வது வழக்கு

    2வது வழக்கு

    கில்மா படங்களையும், வெப்சீரிஸ்களையும் தயாரித்து வந்த பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது தற்போது மீண்டும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது. ராணுவ அதிகாரிகளை கொச்சைப் படுத்திய நிலையில், தற்போது மேஜர் எஸ். என். ராவ் என்பவர் தேசத்தின் பாதுகாவலர்களான ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் வெப்சீரிஸ் எடுத்த ஏக்தா கபூர் மற்றும் டிரிபிள் எக்ஸ் வெப்சீரிஸில் நடித்த நடிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

    English summary
    After Biggbos contestant Hindustani Bhau, Major TC Rao Files Police Complaint Against Ekta Kapoor's Triple X-2 webseries which is telecasted on Zee 5.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X