»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழம்பெரும் நடிகர் மேஜர் சுந்தரராஜனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நண்பராக நடித்துப் புகழ் பெற்றவர் சுந்தரராஜன்.

"மேஜர் சந்திரகாந்த்" என்ற நாடகத்தில் மேஜராக நடித்துப் புகழ் பெற்றதைத் தொடர்ந்து, அவருடைய பெயருக்குமுன்னால் "மேஜர்" ஒட்டிக் கொண்டது.

ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் கூட நடித்துள்ளார் இவர்.

சமீப காலத்தில் டி.வி. தொடர்களில் மட்டுமே நடித்து வந்த மேஜர் சுந்தரராஜனுக்கு சில காலத்திற்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

அவ்வப்போது மருத்துவனைக்குச் சென்று உடலைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார் அவர்.

இந்நிலையில் சமீபத்தில் மேஜர் சுந்தரராஜனுக்குத் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்உடனடியாக சென்னை-வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருடைய உடல் நலம் சிறிது சிறிதாகத்தேறி வருவதாகக் கூறப்படுகிறது.

மேஜர் சுந்தரராஜனின் மகன் கெளதம் சன் டி.வியில் "தில்லானா தில்லானா" நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பதுநினைவிருக்கலாம். இவரும் பல படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil