மனைவியுடன் மாகாபா வெளியிட்ட புகைப்படம்... இணையத்தில் வைரல்
சென்னை : டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தன்னுடைய நிகழ்ச்சிகளின்மூலம் அனைவரையும் கவர்ந்து வருபவர்.
சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டாலும், தன்னுடைய குழந்தைகளுடனான புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

சிறப்பான ரசிகர் வட்டம்
விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார். மேலும் வானவராயன் வல்லவராயன், அட்டி, பஞ்சுமிட்டாய் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

குழந்தைகளுடன் புகைப்படங்கள்
ஆனால் தன்னுடைய புகழ் வெளிச்சம் தன்னுடைய குடும்பத்தினரை பாதிக்காதவண்ணம் அவர்களை அதிலிருந்து தள்ளி வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பரபரப்பாக செயல்பட்டு வந்தாலும் தன்னுடைய குழந்தைகளுடனான புகைப்படங்களை மட்டுமே பதிவிடுவார். மனைவியுடனான புகைப்படங்களை அதிகமாக பதிவிட்டதில்லை.
Recommended Video

படகின் பின்னணியில் புகைப்படம்
சமீபத்தில் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளின்போது அவருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இருவரும் இணைந்து படகு ஒன்றில் இருப்பது போன்ற புகைப்படம் அது. இதையடுத்து தற்போது மீண்டும் மனைவியுடனான புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு
இந்த புகைப்படத்தில் இருவரும் மிகவும் அழகாக உள்ளனர். இதையடுத்து இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவருடைய ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தம்பதியை வாழ்த்தியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











