புளூவேல் : கதாநாயகனை நம்ப வேண்டாம் கதையை நம்புங்கள் என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்
Recommended Video
சென்னை: இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும், கதாநாயகனை நம்பி படம் எடுக்காமல், முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்பி படம் எடுத்தால் தான் படம் வெற்றி பெறும். அதை விட்டுவிட்டு மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்தவேண்டும் என்று புளூவேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார்.
குறிப்பாக இந்த புளூவேல் விளையாட்டின் மூலம் தன் மகனை இழந்த மதுரையைச் சேர்ந்த டெய்சிராணி என்ற தாயும் அவரது சகோதரரும் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அனைவருமே புளூவேல் படம் சரியான நேரத்தில் வந்துள்ளது என்று குறிப்பிட்டு பேசினர்.
நான் குறைவான படங்களிலேயே நடித்திருப்பதால், இந்த கதையை தேர்வு செய்ததில் ஏதாவது தவறு செய்துவிட்டேனோ என்று கூட சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை எடுத்திருக்கிறார்கள். இது மாதிரி உண்மைச் சம்பவத்தை கூறியிருக்கும் படத்தில் நடித்ததில் நான் பெருமைப்படுகிறேன் என்று நடிகை பூர்ணா பேசினார்.
எய்ட் பாய்ண்ட் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனமும் பியாண்ட் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புளூவேல் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் பேரரசு, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், கவிஞர் நிநேகன், நடிகை பூர்ணா, டிவி சீரியல் நடிகர் பிர்லா போஸ், தயாரிப்பாளர்கள் மது மற்றும் அருமைச் சந்திரன், மாஸ்டர் கபீஷ் கன்னா உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இப்படத்தில் புளூவேல் கேம் விளையாட்டால் பாதிக்கப்படும் சிறுவனாக மாஸ்டர் கபீஷ் கன்னா என்ற சிறுவன் நடித்துள்ளார். இந்த புளூவேல் கேமில் தரப்படும் கட்டளையை ஏற்று கையை அறுத்துக்கொள்வது, மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயல்வது என மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.

சிறுவர்களை காப்பாற்றும் பூர்ணா
புளூவேல் கேம் விளையாட்டில் உள்ள அபாயம் தெரியாமல் விளையாடும் சிறுவர்களை காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியாக நடிகை பூர்ணா நடித்துள்ளார். பிர்லா போஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கணேஷ் ராகவேந்திரா. தற்போது உலகம் முழுவதும் பல பேர்களின் உயிர்களை காவு வாங்கிய புளூவேல் விளையாட்டில் உள்ள அபாயத்தை எடுத்துச் சொல்வதற்காக சரியான நேரத்தில் இப்படம் வெளியிடப்படுவது குறித்து பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

சரியான நேரத்தில் வந்துள்ளது
குறிப்பாக இந்த புளூவேல் விளையாட்டின் மூலம் தன் மகனை இழந்த மதுரையைச் சேர்ந்த டெய்சிராணி என்ற தாயும் அவரது சகோதரரும் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அனைவருமே புளூவேல் படம் சரியான நேரத்தில் வந்துள்ளது என்று குறிப்பிட்டு பேசினர்.

சினிமா எனக்கு விருப்பமான துறை
தயாரிப்பாளர் மது பேசும்போது, சினிமாவில் இப்போது தான் நான் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இது தான் எனக்கு முதல் படமாகும். முதல் படமே முதல் தரமாக தயாரித்ததில் பெருமையடைகிறேன். நான் டெக்ஸ்டைல் துறையில் இருந்த போதும், சினிமா எனக்கு விருப்பமான துறை, மேலும் இதுபோல் தரமான படைப்புகளை தயாரிப்புகளை தரவேண்டும் என்பதே எனது விருப்பம் என்று பேசினார்.

ஒரு சோறு பதம்
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வதுபோலவே, இந்தப்படம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. ஒளிப்பதிவாளர் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார். பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் பெரிய சஸ்பென்ஸை உருவாக்கியிருக்கிறது.

உடலால் ஆண் உள்ளத்தால் பெண்
நடிகை பூர்ணா இந்தப் படத்தில் உடலளவில் ஆணாகவும், மனத்தால் பெண்ணாகவும் நடித்துள்ளார். இந்த புளுவேல் கேம் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே நாம் அனைவரும் அறிந்துகொண்டோம். மதுரையில் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் நம் அனைவரையும் உலுக்கியுள்ளது.

இயக்குநர்களுக்கு வாய்ப்பில்லை
தமிழ் சினிமாவில் தயாராகும் 90 சதவிகித படங்கள் தோல்வியடைகின்றன. இதற்கு முக்கிய காரணம் கதையல்ல. நல்ல திறமையான இயக்குநர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. இப்பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேசினார்.

சிறுவர்களுக்கு விழிப்புணர்வு
கவிஞர் ரவிபாரதி பேசும்போது, சினிமா என்பது பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டுசேர்க்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடும் எடுக்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் புளூவேல் விளையாட்டைப் பற்றி இந்தப்படத்தில் கூறியிருக்கிறார்கள். சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையிவ் இப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்று பேசினார்.

ஒற்றுமை இல்லை
நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ஆந்திராவிலும் கேரளாவிலும் சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தான் சரியில்லை என்று குறை கூறகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் ஒற்றுமை இல்லை. முதலில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் மற்றவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை நாம் நிறுத்தவேண்டும்.

கதாநாயகனை நம்பாதீர்கள்
அதோடு, கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீர்கள். கதையை நம்பி படம் எடுங்கள். அதேபோல், நல்ல இயக்குநர்களுக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அப்படி நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால், அதை அதிர்ஷ்டமாக கருதி அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதை விட்டு விட்டு மற்றவர்களை குறை கூறக்கூடாது என்று பேசினார்.
சமுதாயத்தின் மீது பழி
கவிஞர் நிநேகன் பேசும்போது, எந்த விஞ்ஞானம் நம் பிள்ளைகளின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறதோ, அதே விஞ்ஞானம் தான் நம் நாட்டை உயர்த்தியிருக்கிறது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறான வழியில் சென்றால் சமுதாயத்தின் மீது தான் வீண் பழி சுமத்துகிறார்களே தவிர, தங்களிடம் இருக்கும் தவறை உணர்ந்து சரி செய்ய முயல்வதில்லை, இந்நிலை மாறவேண்டும் என்று பேசினார்.

பூர்ணாவை பார்த்து பயம்
மாஸ்டர் கபிஷ் கன்னா பேசும்போது, இது எனக்கு முதல் படம். இந்தப்படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த எனது தந்தைக்கும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இக்கதையை எனக்கு கூறும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பூர்ணா மேடத்தை பார்த்து தான் பயமாக இருந்தது என்று பேசினார்.

புளூவேல் கேம் தெரியாது
நடிகை பூர்ணா பேசும்போது, எனக்கு புளூவேல் கேம் பற்றி தெரியாது. எனக்கு எனது சகோதாரி தான் உதவி செய்தார். முதல் நாள் படப்பிடிப்பில் சற்று சோர்வாகத் தான் இருந்தேன். பெரிய நடிகர்கள் இல்லை, புகைப்படக்காரர்கள் அதிகமில்லை. இதனால் இரண்டாவது நாள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டுமா என்று யோசித்தேன்.

தப்பு பண்ணிட்டேனோ
நான் குறைவான படங்களிலேயே நடித்திருப்பதால், இந்த கதையை தேர்வு செய்ததில் ஏதாவது தவறு செய்துவிட்டேனோ என்று கூட சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை எடுத்திருக்கிறார்கள். இது மாதிரி உண்மைச் சம்பவத்தை கூறியிருக்கும் படத்தில் நடித்ததில் நான் பெருமைப்படுகிறேன் என்று பேசினார்.
இயக்குநர் ரங்கநாதன் பேசும்போது, இப்படம் சிறந்த படமாக வந்ததற்கு, படக்குழுவினர் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பு தான் காரணம் என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











