twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “குழந்தை பிறப்பு தொப்புள்கொடி உறவு, ஆனால்”... மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைக்கும் பிரபல நடிகை!

    இந்தியாவில் தத்தெடுப்பு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என நடிகை சுஷ்மிதா சென் கோரிக்கை விடுத்துள்ளார்.

    |

    ஹைதராபாத்: இந்தியாவில் தத்தெடுப்பு நடைமுறைகள் மிகவும் கடினமாக உள்ளதால், அதனை எளிமைப்படுத்த வேண்டும் என அரசுக்கு நடிகை சுஷ்மிதா சென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து முதன் முதலில் உலக அழகிப்பட்டம் பெற்றவர் சுஷ்மிதா சென். மிஸ் பெமினா உள்பட நிறைய அழகிப்போட்டிகளின் டைட்டில் வின்னர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

    நடிகை சுஷ்மிதா சென் திரைத்துறையை தாண்டி, சமூக பங்களிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்து வருகிறார்.

    பத்தவச்சுட்டீயே பரட்ட.. பிக்பாஸ் வீட்டுல ஓபன் நாமினேஷனாம்! பத்தவச்சுட்டீயே பரட்ட.. பிக்பாஸ் வீட்டுல ஓபன் நாமினேஷனாம்!

    எளிமை தேவை:

    எளிமை தேவை:

    இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த தத்தெடுப்பு குறித்த ஃபிக்கி பெண்கள் அமைப்பின் மாநாட்டில் சுஷ்மிதா சென் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தத்தெடுப்பு நடைமுறைகள் கடினமாக இருப்பதால், அதனை எளிமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    எனது வீடு:

    எனது வீடு:

    இதுகுறித்து அவர் பேசியதாவது, " ஹைதராபாத் தான் எனது தாய் வீடு. நான் இங்கு தான் பிறந்தேன். இந்த நகரத்தில் இருந்து தான் நான் முதன்முதலில் உலகத்துக்கு வந்தேன். எனவே எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் நான் இங்கு வந்துவிடுவேன். அது எனது வீட்டுக்கு வருவதை போன்றது.

    ஃபிக்கி பெண்கள் அமைப்பு:

    ஃபிக்கி பெண்கள் அமைப்பு:

    பிலிம் நகரில் உள்ள சுஷ் ஹோமில் எனக்கு ஒரு அறை உள்ளது. நான் இங்கு வரும்போதெல்லாம், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நான் பிறந்த வீட்டை சென்று பார்ப்பேன். இந்த அனுபவத்தை எனது குழந்தைகளிடம் நான் பகிர்ந்து கொள்வேன். எனக்கும் ஃபிக்கி பெண்கள் அமைப்புக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. ஃபிக்கி அமைப்பில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு உறுப்பினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இந்த அமைப்பு வாய்ப்பளிக்கும் என்பதே.

    ஆச்சர்யங்கள்:

    ஆச்சர்யங்கள்:

    ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் எனும் எண்ணத்தில் தான் நான் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென அழகிப் போட்டியில் கலந்துக்கொண்ட பின்னர் எனது வாழ்க்கையே மாறிவிட்டது. நான் நடிப்பதற்கு தயாராகவே இல்லை. எனது வாழ்க்கையில் நிறைய ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன. அவை அனைத்தும் நல்லதுக்கே. எதற்காகவும் நான் வருத்தப்பட போவதில்லை. எனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நான் அனுபவித்து மகிழ்கிறேன்.

    தத்தெடுப்பு:

    தத்தெடுப்பு:

    எனது இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுப்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் 10 வருடங்கள் போராடினேன். ஏனெனில் அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை. என்னை போன்ற ஒத்தக்கருத்துள்ளவர்களின் துணையோடு இந்த சட்டத்தை எதிர்த்து போராடி, அதனை மாற்றி எனது இரண்டாவது மகள் அலிஷாவை தத்தெடுத்தேன்.

    அரசிடம் வேண்டுகோள்:

    அரசிடம் வேண்டுகோள்:

    தத்தெடுப்பு என்பது வயிற்றில் இருந்து வரும் உறவு நல்ல. அது மனதில் இருந்து வருவது. குழந்தை பிறப்பு என்பது தொப்புள்கொடி உறவு. ஆனால் தத்தெடுத்தல் என்பது பொதுநலன் சார்ந்தது. எனவே அரசுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்தியாவில் தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இதை நான் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளிடம் கேட்டுகொள்கிறேன்" என்றார்.

    வெற்றியின் ரகசியம்:

    வெற்றியின் ரகசியம்:

    அப்போது, உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என சுஷ்மிதாவிடம் கேட்டனர். அதற்கு அவர், "வெற்றி பற்றிய எனது பார்வை தான் காரணம் என நினைக்கிறேன். தோல்வியை கண்டு தான் பயப்படுவதில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். அதை அனுபவிக்க, ஆராய துடிக்கிறேன். தோல்வி தான் வெற்றியின் படிக்கட்டு. ஒரு பெண்ணாக இருப்பது மிகவும் சக்கிவாய்ந்தது", என பதிலளித்தார்.

    English summary
    Actress Sushmita Sen asked the authorities and the Government to make adoption less tedious as it is now a very complicated process.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X