Redin Kingsley - ரெடின் கிங்ஸ்லி திருமணத்தில் எதற்கு இரண்டு தாலிகள்.. ஓ இப்படி ஒரு விஷயமா?

சென்னை: Redin Kingsley Marriage (ரெடின் கிங்ஸ்லி திருமணம்) ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணத்தில் எதற்காக இரண்டு தாலிகள் என்பது குறித்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விளக்கமளித்திருக்கிறார்.

க்ரூப் டான்ஸராக சினிமாவில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி சில பாடல்களில் நடனம் ஆடியிருக்கிறார். பிறகு அவருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தது. நெல்சன் திலீப்குமார் சிம்புவை வைத்து முதலில் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தில் கமிட்டானார் ரெடின். ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

Make up Artist Explains about Redin Kingsley Sangeetha Marriage

கோலமாவு கோகிலா: படம் பாதியில் நின்றதால் பிற தொழில்களை கவனித்துவந்தார் ரெடின் கிங்ஸ்லி. அதன்படி நடன பள்ளி ஆரம்பித்தது, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஆரம்பித்தது என படுபிஸியாக இருந்தவருக்கு நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் மீண்டும் அறிமுகம் கிடைத்தது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்தார்.

குவிந்த வாய்ப்புகள்: அந்தப் படத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட பலருடன் நடிக்க ஆரம்பித்தார். அவரது வித்தியாசமான உடல்மொழி, வாய் மொழி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. இன்னும் அவரது நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றனர்.

திருமணம்: 46 வயதான ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்தார். திடீரென சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மைசூரில் வைத்து அந்தத் திருமணம் நடந்தது. சிம்பிளாக திருமணத்தை முடித்த கையோடு சங்கீதாவுடன் மாலத்தீவுக்கு தற்போது ஹனிமூன் சென்றிருக்கிறார் அவர். திருமணம் செய்துகொண்ட அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

2 தாலிகள்: ரெடினின் திருமணத்தில் ஹைலைட்டாக அமைந்தது அவர் சங்கீதாவுக்கு இரண்டு தாலிகள் அணிவித்ததுதான். எதற்காக இரண்டு தாலிகள் என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சங்கீதாவுக்கு மேக்கப் செய்த பெண் அதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "ரெடினும் சங்கீதாவும் பிளான் பண்ணி திருமணத்தை செய்யவில்லை. படப்பிடிப்பின் இடைவேளையில்தான் திருமணம் நடந்தது.

எனக்கு அதில் பிடித்தது என்னவென்றால் ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர். சங்கீதா ஹிந்து. எனவே கிறிஸ்தவ முறைப்படி ஒரு மாங்கல்யமும், ஹிந்து முறைப்படி ஒரு மாங்கல்யமும் சங்கீதா அணிந்திருந்தார். இரு முறைப்படியும் திருமணம் நடந்தது. முதலில் கோயிலுக்கு சென்ற அவர்கள் பிறகு சர்ச்சுக்கும் சென்றார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X