அந்த மேக்கப் உண்மை இல்ல.. எல்லாமே போய்.. கடுப்பான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ! மீண்டும் வைரலாகும் ராணு!

Recommended Video

நான் இப்போ செலிபிரிட்டி.. என்னை எப்படி தொட்டு பேசலாம்

சென்னை: ராணு மோண்டாலின் மேக்கப் குறித்து வைரலான போட்டோ போலியானது என தகவல் வெளியாகியிருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் நாடியா ரயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தி பாடல்களை பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரது குரல் லதா மங்கேஷ்கர் குரல் போல் இருந்ததாலும் இனிமையாக பாடியதாலும் அவர் பாடியதை வீடியோ எடுத்து டிவிட்டரில் வெளியிட்டார் ஒரு நெட்டிசன்.

அந்த வீடியோ வைரலானதால் நாடு முழுவதும் பிரபலமானார் ராணு. இதனை தொடர்ந்து சங்கர் மகாதேவன் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஓவர் மேக்கப்

ஓவர் மேக்கப்

தொடர்ந்து பாடல்களை பாடி வரும் ராணு மோண்டால் அண்மையில் ஒரு ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்தார். அப்போது லெஹாங்கா அணிந்திருந்த ராணு, ஓவர் மேக்கப் போட்டிருந்திருந்ததாக போட்டோ ஒன்று வெளியானது.

பேய் போட்டோக்களுடன்

பேய் போட்டோக்களுடன்

கொஞ்சமும் மேட்சாகாத அந்த மேக்கப்பில் பேய்ப்போல் இருந்தார் ராணு. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஹாலோவின் மேக்கப் என்று கூறி, பேய் போட்டோக்களுடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்தனர்.

வயதுக்கு ஏற்றது போல்

வயதுக்கு ஏற்றது போல்

மேலும் மேக்கப் கலைஞர் ராணுவை வச்சு செய்துவிட்டார் என்றும் விளாசியிருந்தனர். வயதுக்கு ஏற்றது போல் மேக்கப் போட்டுவிட வேண்டும் என்றும் இப்படியா கடமையான மேக்கப் என்ற பெயரில் ஒரு மூதாட்டியை அசிங்கப்படுத்துவது என்றும் கேட்டு சாடியிருந்தனர்.

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விளக்கம்

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விளக்கம்

இந்நிலையில் ராணு மோண்டாலின் மேக்கப் குறித்து வெளியான போட்டோ போலியானது என அவருக்கு மேக்கப் போட்டுவிட்ட மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான சந்தியா தெரிவித்திருக்கிறார்.

வித்தியாசம்

வித்தியாசம்

இதுதொடர்பாக தான் மேக்கப் போட்டு விட்ட போட்டோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் நாங்கள் வேலை செய்த போட்டோவுக்கும் போலியாக எடிட் செய்யப்பட்ட போட்டோவுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம்.

இது நல்லதல்ல

இது நல்லதல்ல

எல்லா நகைச்சுவைகளும் ட்ரோல்ஸும் நன்றாக இருக்கின்றன, அவை நம்மையும் சிரிக்க வைக்கின்றன, ஆனால் ஒருவரின் உணர்வுகளை புண்படுத்தும், இந்த விஷயம் நல்லதல்ல. நீங்கள் அனைவரும் உண்மையைப் புரிந்துகொண்டு, போலி மற்றும் உண்மையானவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறோம். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம் என்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

வைரலாகும் ராணு

தற்போது ராணு மோண்டாலின் ஒரிஜினல் மேக்கப் போட்டோ வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணு மோண்டாலின் சர்ச்சை வீடியோ ஒன்று வைரலானாது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: singer make up
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X