படப்பிடிப்பில் திடீரென மயங்கிய ஒப்பனை பெண்.. மருத்துவமனைக்கு சென்ற சில மணிநேரத்திலேயே உயிரிழந்தார்!

சென்னை: சின்னத்திரை தொடர் படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்து ஒப்பனைப் பெண் உயிரிழந்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில் ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் கார்த்திக் வாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Make-up girl dies suddenly after fainting on aruvi shooting spot

மேலும் ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்.டி.பி ரோசரி, டேவிட் சாலமன் ராஜா, மீனா செல்லமுத்து, சுமங்கலி மற்றும் ஸ்ரீ வித்யா சங்கர் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.

ஒப்பனைக்கலைஞர்: இந்நிலையில், அருவி சீரியலின் படப்பிடிப்பு சென்னையில் ஆலப்பாக்கத்தில் உள்ள தர்மராஜா கோவிலில் நடந்து கொண்டு இருந்த போது ஒப்பனைப் பெண் ராமபிரபாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இரவில் இருந்த உடல்நிலை சரியில்லாத நிலையில், காலையில் அருவி சீரியலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மூச்சு திணறல் அதிகரித்ததால், ஜோவிதா லிவிங்ஸ்டனிக் கார் ஓட்டுநரின் உதவியுடன் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துயர சம்பவம்: மருத்துவமனைக்கு சென்ற சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். பட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமபிரபாவிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருக்கு இருந்ததால், மகனை சித்தி வளர்த்து வர, இவர் சென்னையில் தங்கிவேலை செய்து வந்த நிலையில் திடீரென இன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாளை இறுதிசடங்கு: தற்போது இவரது உடல் ராஜூவ் காந்தி மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை பிரேதப் பரிசோதனை நடைபெற்ற பின், சொந்த ஊரான பட்டுக்கோட்டை கொண்டு செல்லப்பட்டு பின் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X