'டைட்டிலை மாத்துங்க..' ராகவா லாரன்ஸ் படத்துக்கு திடீர் எதிர்ப்பு.. நோட்டீஸ் அனுப்பியது கர்னி சேனா!
மும்பை: ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கர்னி சேனா நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்த படம், காஞ்சனா. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது.
இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர்.

சில மாற்றங்கள்
இந்தப் படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. இதை தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ளார். இதில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். கியாரா அத்வானி ஹீரோயின். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதலில் கூறப்பட்டது
தமிழில் திருநங்கை கேரக்டரில் சரத்குமார் நடித்திருந்தார். இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அக்ஷய் குமாரே அந்த கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் லுக், ரசிர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, ராகவா லாரன்ஸுக்கு தெரியாமலேயே படக்குழு வெளியிட்டது.

சமாதானம்
இதனால் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார், லாரன்ஸ். இனி இந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். பின்னர் தயாரிப்பாளர் வந்து பேசியதை அடுத்து சமாதானம் ஆனார். படத்தின் ஷூட்டிங் கொரோனாவுக்கு முன்பு முடிந்தது. இந்நிலையில் அக்ஷய் குமார், நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ.1.5 கோடியை அளித்தார்.

ஶ்ரீராஜ்புத் கர்னி சேனா
திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக அவர் இந்த தொகையை வழங்கினார். இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, இந்த படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று ஶ்ரீராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு, இதன் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டைட்டிலை மாற்றணும்
அதில், இந்த டைட்டில், பெண் தெய்வமான லட்சுமி தேவியை களங்கப்படுத்துவதுபோல வைக்கப்பட்டுள்ளதாகவும் தெய்வத்தின் கண்ணியத்தை குறைப்பது போலவும் அவமரியாதை செய்வது போல இருப்பதாகவும் இது சமூகத்துக்கு தவறானத் தகவலை தருவதாகவும், இந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











