பொன்னியின் செல்வன் படத்துக்காக த்ரிஷா செய்யும் சூப்பர் முயற்சி.. ஆச்சர்யத்தில் படக்குழு!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷா சோழ இளவரசி குந்தவை தேவியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அந்த கதாபாத்திரத்திற்காக பிரத்யேக உழைப்பு அவர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட காவிய படைப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

கனவு படம்
எம்ஜிஆர் முதல் ஏகப்பட்ட நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கனவு படமாகவே இருந்து வந்த பொன்னியின் செல்வன் நாவலை நனவாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குந்தவையாக த்ரிஷா
பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய், ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்து வரும் நிலையில், வந்தியத்தேவனாக நடித்து வரும் கார்த்தியின் காதலி சோழ தேசத்தின் இளவரசி குந்தவை தேவியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அசந்து போன படக்குழு
குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், சமிபத்தில் படத்தின் ரஷ் பார்த்த படக்குழுவினர் நடிகை த்ரிஷாவின் நடிப்பை பார்த்து மிரண்டு போயுள்ளார்களாம். அதிலும், குதிரை ஏற்றம் உள்ளிட்ட மிரட்டலான காட்சிகளிலும் நடிகை த்ரிஷா நடிப்பில் மிரட்டி இருக்கிறாராம்.

சொந்த குரலில் டப்பிங்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா எல்லாம் வழக்கமாக டப்பிங்கிற்காக வேறு ஒரு நபரை வைத்திருப்பார்கள். ஆனால், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு நயன்தாரா சொந்தக் குரலில் டப் செய்து வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் சங்கத் தமிழ் மொழியில் த்ரிஷா டப்பிங் பேசி வருவதாகவும் சூப்பரான தகவல்கள் கசிந்துள்ளன.

பீஸ்ட் உடன் மோதல்
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து வரும் பிரம்மாண்ட காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சம்மரில் விஜய்யின் பீஸ்ட், கேஜிஎஃப் சாப்டர் 2 உள்ளிட்ட படங்களுடன் பொன்னியின் செல்வன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமிக்ரான் வேலையை காட்டுமா?
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் பாதிப்பு ஒட்டுமொத்த திரைத்துறையையும் முடக்கி போட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை மக்கள் செலுத்த தொடங்கிய நிலையில், கொரோனாவின் கோரத் தாண்டவம் குறைந்து மீண்டும் தியேட்டர்களில் வசூல் மழை குவிந்து வருகிறது. ஆனால், புதிதாக வந்துள்ள ஓமிக்ரான் வைரஸ் அடுத்த ஆண்டு சம்மருக்கு திரையரங்களை முடக்கி விடுமா என்கிற அச்சமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











