சீதா ரோலில் இந்த நடிகையா...நோ சொல்லும் ராமாயண பட தயாரிப்பாளர்கள்
மும்பை : ராமாயணத்தை புதிய கோணத்தில் எடுக்கும் முயற்சியில் அலவ்கிக் தேசாய் இறங்கி உள்ளார். அதாவது சீதாதேவியின் கோணத்தில் ராமாயணத்தை சொல்லப் போகிறார்களாம். இந்த படத்திற்கு எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் இதற்கான கதையை எழுதி வருகிறார்.
ஆரம்பத்தில் இந்த படத்தில் சீதா ரோலில் நடிக்க கரீனா கபூரிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் வேண்டும் என கரீனா கேட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் சீதா ரோலில் நடிக்க இதுவரை யாரையும் முடிவு செய்யவில்லை என கூறி உள்ளார் விஜயேந்திர பிரசாத்.

சீதா ரோலில் கரீனாவா
அதே சமயம் விரைவில் சீதா ரோலில் யார் நடிக்க போகிறார் என்பது அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சீதாவா நடிக்க கரீனாவிடன் கேட்கப்பட்டதாக கூறப்படும் தகவலையும் அவர் மறுத்து விட்டார்.

புதுமுகம் நடிக்க போகிறாரா
பழைய முகங்களை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால், புதுமுகம் யாராவது நடிக்க வைக்கலாமா என படக்குழு யோசித்து வருகிறதாம். ராமாயண சீரியலில் சீதையாக நடித்த தீபிகா சிக்லியாவை நடிக்க வைக்கலாம் எனவும் யோசிக்கிறார்கள்.

தீபிகாவை சீதாவாக ஏற்பார்களா
தீபிகா படுகோன் போன்ற பிரபல நடிகைகளை நடிக்க வைத்தால் ரசிகர்கள் அவரை தீபிகாவாக தான் பார்ப்பார்களே தவிர, சீதாவாக பார்க்க மாட்டார்கள் என பட தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்களாம்.

இவர் தான் ராமரா
தீபிகா படுகோனை தான் சீதா ரோலுக்காக யோசித்தோமே தவிர கரீனாவை ஒரு போதும் யோசிக்கவே இல்லை என கூறி விட்டார்கள் தயாரிப்பாளர்கள். இந்த படத்தில் மகேஷ் பாபுவை ராமர் ரோலில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனராம்.

அப்போ ராவணன் யாரு
ராவணன் ரோலில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க போகிறாராம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ள இந்த படம் 3 டி ஷாட்டில் எடுக்கப்பட உள்ளதாம். இந்தியில் எடுக்கப்பட்டாலும் இந்த படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











